பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2021-22ஆம் நிதியாண்டுக்கா பட்ஜெட் அறிக்கையில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தவும், இதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் படி பிரிட்ஜ், வாசிங் மெஷின், டிரையர், அலுமினியம் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது சுங்க வரியை அதிகரிக்க உள்ளதாக நிதியமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பைப் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்கள் மற்றும் மூலப்பொருட்கள் மீதும் கூடுதல் வரியை விதிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதால் எலக்ட்ரானிக்ஸ், வெயிட் கூட்ஸ் பொருட்களின் உற்பத்தி விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை அதிகரிக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட வேலைவாய்ப்பு சந்தை பாதிப்பை சரி செய்ய முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்க திட்டத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடப்பட்டது..


Click it and Unblock the Notifications