இன்றைய டிஜிட்டல் உலகில் வங்கி மோசடிகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இந்த ஆபத்தான போக்கு மக்களிடையே பாதுகாப்பாக இருப்பதன் அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது. நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி எதற்கு உதவுகிறதோ.. இல்லையோ.. மோசடி செய்பவர்களுக்கு நன்றாக உதவுகிறது. சமீபத்தில் வந்த செய்தியில் கூட OTP இல்லாமலேயே ஒருவருடைய விபரங்களை எடுக்கின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தது. அதற்கு சான்றாய் 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் கிரெடிட் டெபிட் கார்டு மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மோசடிகளால் ரூ. 177 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, சைபர் மோசடியால் ஏற்பட்ட இழப்பு 2023-ஆம் நிதியாண்டில் ரூ.69.68 கோடியிலிருந்து 2024-ஆம் நிதியாண்டில் ரூ.177.05 கோடியாக அதிகரித்துள்ளது என்றுக் கூறியுள்ளார்.

2022-ஆம் நிதியாண்டில் ஏற்பட்ட இழப்பு 80.33 கோடி ரூபாயாகவும், 2021-ஆம் நிதியாண்டில் ஏற்பட்ட இழப்பு 50.10 கோடியாகவும், 2020-ஆம் நிதியாண்டில் ஏற்பட்ட இழப்பு 44.22 கோடியாகவும் இருந்த நிலையில, தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
மோசடியான பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்பை வாடிக்கையாளர்கள் மீட்டெடுக்க உதவுவதற்காக, வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
வங்கியின் குறைபாடு காரணமாக பணத்தை இழந்திருந்தால் அல்லது வங்கியிலோ வாடிக்கையாளரிடமோ குறைபாடு இல்லாமல், வேறு எங்காவது குறைபாடு இருந்து, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை பற்றிய தகவல் கிடைத்த 3 வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளர் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.
நிதி மோசடிகள் உட்பட எந்தவொரு சைபர் சம்பவங்களையும் குடிமக்கள் புகாரளிக்க, உள்துறை அமைச்சகம் தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல் போர்டல் (www.cybercrime.gov.in) மற்றும் தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் '1930' ஆகியவற்றைத் தொடங்கியுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை இணையதளம் அல்லது வங்கிகளின் கிளைகளில் நிதி மோசடியைப் புகாரளிக்கலாம்.
உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் விவரங்களை அடிக்கடி சரி பார்ப்பது நல்லது. அதில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடந்தது போல தோன்றினால், உடனடியாக வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் கொடுக்காதீர்கள். எந்த வங்கியும் உங்களிடம் கால் செய்து வங்கி விவரங்களை கேட்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் எச்சரிக்கையாக இருக்கும் போது, இதுபோன்ற மோசடிகளை வெகுவாகக் குறைக்க முடியும் .
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications