மிக்ஜாம் புயல் காரணமாக நவம்பர் 3,4ம் தேதிகளில் தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழையால் சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.
பல இடங்களில் தண்ணீர் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தால் மாடியில் தஞ்சம் அடைந்தனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் கடுமையான இழப்பை சந்தித்தனர். பல தொழிற்சாலைகளில் மழை நீர் புகுந்ததால் ஆலைகளை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது. கடந்த சில தினங்களாக மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. இது மக்களுக்கு சிறிது நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும் சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்ப சிறிது காலம் பிடிக்கும் என்று சென்னைவாசிகள் கூறுகின்றனர்.
மிக்ஜாம் புயல் தமிழகத்தில் ரூ.11,000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை சேர்ந்த குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் அமைப்பான இந்தியா தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் கே.இ.ரகுநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த நான்கு மாவட்டங்களில் 3 மாதங்களுக்கு சொத்து வரி, மெட்ரோ வரி மற்றும் கழிவுநீர் கால்வாய் வரிகளை ரத்து செய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட எந்திரங்களை மறுசீரமைப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்கு நிறுவனங்களுக்கு சலுகை வட்டியில் கடன் வழங்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு குறித்த கால கடனை திரும்ப செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் மாநில அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
சென்னையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பாக்ஸ்கான், பெகாட்ரான், டெய்ம்லர், ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஆலைகள் உள்ளன. பாக்ஸ்கான், பெகாட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி விட்ட போதிலும், தாழ்வான நீரில் மூழ்கிய பகுதிகளில் அமைந்துள்ள சில உற்பத்தி ஆலைகள் இன்னும் செயல்பட தொடங்கவில்லை என தகவல்.
மிக்ஜாம் புயல் இரண்டே நாளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு சென்று விட்டது. இந்த புயல் பெரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியதோடு, 14 பேரின் உயிரையும் பறித்து விட்டது. உயிர் இழந்வர்களில் பெரும்பகுதியினர் சென்னைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications