இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தது இந்திய வர்த்தகத் துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சிக்கிய உயிரிழந்தார். பால்கர் அருகே நடந்த விபத்தில், சைரஸ் மிஸ்திரி உள்ளிட்ட 4 பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்திரியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சைரஸ் மிஸ்திரி-யின் மரணம் டாடா சன்ஸ் - ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் மத்தியிலான பிரச்சனைகளுக்கு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டாடா சன்ஸ்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகச் சைரஸ் மிஸ்திரி இருந்த காலக்கட்டத்தில் அவர் எடுத்த சில முடிவுகள் ரத்தன் டாடா உட்பட டாடா டிரஸ்ட் அமைப்பு மற்றும் பங்குதாரர்களுக்குப் பெரும் பிரச்சனையாக மாறியது. இதன் எதிரொலியாகப் பங்குதாரர்கள் ஆதரவுடன் சைரஸ் மிஸ்திரி-ஐ 2016ல் டாடா சன்ஸ் நிறுவனத்தை விட்டும், தலைவர் பதவியை விட்டும் நீக்கப்பட்டார்.
ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப்
டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா டிரஸ்ட் அமைப்பிற்கு அடுத்தபடியாக அதிகப் பங்குகளை வைத்திருப்பது ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் தான். இதன் அடிப்படையில் தான் முதல் முறையாக வெளியாட்களான சைரஸ் மிஸ்திரி-ஐ டாடா சன்ஸ் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
டாடா - மிஸ்திரி
டாடா சன்ஸ் நிறுவனத்தின் சைரஸ் மிஸ்திரி-யின் குடும்பம் சுமார் 18.4 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதேபோல் ரத்தன் டாடா-வின் சகோதரரான நியோல் டாடா, சைரஸ் மிஸ்திரி-யின் சகோதரி ஆலு அவர்களைத் திருமணம் செய்துள்ளார். டாடா சன்ஸ் - ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் மத்தியில் வர்த்தகம் தாண்டி குடும்ப அளவிலும் நெருக்கம் அதிகமாக உள்ளது.
சைரஸ் மிஸ்திரி
இப்படியிருக்கும் நிலையிலும் 2016ல் டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி வெளியேற்றிய பின்பு டாடா சன்ஸ் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று வரையில் நடைபெற்று வரும் வேளையில் ரைசஸ் மிஸ்திரி தொடர்பான டாடா சன்ஸ் - ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் மத்தியிலான வழக்கு என்ன ஆகும்.
வழக்கு
ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த போது டாடா சன்ஸ் தொடர்பான வழக்கில் பங்கு விற்பனை தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டது, ஆனால் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் சைரஸ் மரணம் டாடா சன்ஸ் - ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் மத்தியிலான வழக்கு அடுத்தச் சில வாரத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications