மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் விபத்தில் சிக்கிய நிலையில், சைரஸ் மிஸ்திரி விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
2012 முதல் 2016 வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் பெலான்ஜி மிஸ்திரி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவர் பலி
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பால்கர் அருகே நடந்த விபத்தில், சைரஸ் மிஸ்திரி உள்ளிட்ட 4 பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுள்ளனர். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டாடா குழுமத்தில் முக்கிய பதவி
இந்த விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்திரியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவரான சைரஸ் மிஸ்திரி, சில பிரச்சனைகள் காரணமாக டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
நீதி வேண்டும் போராட்டம்
டாடா குழுமத்தினை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி, தனக்கு சாதகமான தீர்ப்பு வந்த போதிலும், பதவி தனக்கு வேண்டாம் என்றும், அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், தனக்கு நீதி கிடைப்பதற்காகத் தான் வழக்கு தொடர்ந்ததாகவும் கூறினார். மேலும் தனது பதவியில் அமரும் எண்ணம் துளியும் இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் குழுவில் இடம்பெற விருப்பம்
தனது டாடா குழுமத்தில் எந்த பதவியும் வேண்டாம் என்றாலும், இயக்குனர் குழுவில் இடம்பெற விரும்பினார். எனினும் அதற்கு டாடா குழுமம் சம்மதிக்கவில்லை. மேலும் இது குறித்து டாடா குழுமத்திற்கே சாதகமான தீர்ப்பும் வந்தது. அதன் பிறகு டாடாவின் தலைவராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். தற்போது வரையில் சந்திரசேகரனே தலைவர் பதவியில் இருந்து வருகின்றார்.
இரங்கல்
சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, ஸ்மிரிதி இரானி, பியூஷ் கோயல், தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட பல தொழிலதிபர்களும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications