மறைந்த சைரஸ் மிஸ்திரி மகன்களின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா..?

மும்பை: உலக அளவில் பில்லியனியர்களின் எண்ணிக்கை குறிப்பாக இளம் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்மையில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 25 இளைய பணக்காரர்களில் பெரும்பாலானவர்களின் வயது 33 மற்றும் அதற்கும் கீழாகும்.

ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் தானாக சொந்தமாக உழைத்து முன்னேறி பணக்காரர் ஆனவர்களை விட தங்களுடைய தந்தை மற்றும் அவர்களது நிறுவனங்களில் இருந்து கிடைத்த பங்குகள் மூலம் பணக்காரர்கள் ஆனவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

மறைந்த சைரஸ் மிஸ்திரி மகன்களின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா..?

இந்தியாவில் வளர்ந்து வரக்கூடிய இளம் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டு பேர் முக்கிய இடம் பிடித்துள்ளனர் அவர்கள் சைரஸ் மிஸ்திரியின் ஸாஹன் மற்றும் பிரோஸ் மிஸ்திரி ஆவர்.

சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்தவர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாடா சன்ஸ் குழுமத்தின் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்பட்டவர். எதிர்பாராத விதமாக 2022ஆம் ஆண்டு கார் விபத்தில் இவர் மரணமடைந்தார். சைரஸ் மிஸ்திரிக்கு டாடா சன்ஸில் இருந்த பங்குகளானது அவரது மகன்களுக்கு பிரித்து தரப்பட்டது.

இதன் படி ஸாஹன் மற்றும் பிரோஸ் மிஸ்திரி ஆகிய இருவரின் மொத்த சொத்து மதிப்பு 9.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தந்தை மூலம் கிடைத்த சொத்து தலா 4.9 பில்லியன் டாலர்கள் ஆகும்.

ஸாஹன் மிஸ்திரி : 25 வயதான இவர், சைரஸ் மிஸ்திரியின் இளைய மகன். டாடா சன்ஸ் குழுமத்திலிருந்து கிடைத்த பங்குகள் மூலம் இவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

யேல் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்த இவர் மும்பையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனமான ஷாப்பூர் ஜி பாலோஞ்சி குழுமத்தில் பணி செய்து வருகிறார். இவருக்கு இந்த நிறுவனத்தில் இருந்து 25 சதவீத பங்குகள் கிடைத்துள்ளன. ஃபின்லாந்து குடியுரிமை இருந்தாலும் மும்பையிலேயே தங்கி குடும்ப தொழில்களை பார்வையிட்டு வருகிறார்.

பிரோஸ் மிஸ்திரி: பிரோஸ் மிஸ்திரி , சைரஸ் மிஸ்திரியின் மூத்த மகன். 27 வயதாகும் இவர் வார்விக் பல்கலைகழகத்தில் மேற்படிப்பை முடித்தார். தொழில் குடும்ப பின்னணி கொண்டவர் என்பதால் சிறு வயது முதலே தொழில்களில் ஆர்வம் உண்டு . ஷாப்பூர் ஜி பாலோஞ்சி குழுமத்தில் பணி செய்து வருகிறார். சொந்தமாகவும் நிறுவனங்களை தொடங்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபின்லாந்து குடியுரிமை இருந்தாலும் மும்பையிலேயே தங்கியுள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+