அகவிலைப்படி உயர்வு தாமதம் ஏன்? மத்திய அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் ஊழியர்கள்..!!

மத்திய அரசு ஊழியர்கள் நடப்பாண்டின் ஜூலை மாதம் முதலான அகவிலைப்படி உயர்வுக்காக நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், மத்திய அரசு இதுவரை அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாததால், அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வாரம் தோறும் புதன்கிழமைகளில் வழக்கமாக நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் புதன்கிழமை வாராந்திர அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை. இருந்தாலும் அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் மத்திய நிதியமைச்சகமே நேரடியாக அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட முடியும். அப்படி இருந்தும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வராமல் இருப்பதாக அரசு ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அகவிலைப்படி உயர்வு தாமதம் ஏன்? மத்திய அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் ஊழியர்கள்..!!

ஜூலை 31 அன்று தொழிலாளர் பணியகம் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டை வெளியிட்டது. அன்றிலிருந்து மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். அக்டோபர் 14 இல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இரயில்வே ஊழியர்களுக்கான செயல்திறன் சார்ந்த போனஸ் அறிவிக்கப்பட்டதே தவிர, அகவிலைப்படி உயர்வு பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Also Read

எனவே ஊழியர் சங்கங்களை சேர்ந்த சில அதிகாரிகள் புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படலாம் என கணித்திருந்தனர். ஆனால், கூட்டமே நடைபெறாததால் அறிவிப்பு மேலும் தள்ளிப்போயுள்ளது. இனி அரசாங்கம் எப்போது இதை அறிவிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதம் 60% ஆக உள்ளது. ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரையிலான 12 மாத சராசரி சில்லறை பணவீக்க தரவுகளின்படி, ஜூலை 2026-க்கான அகவிலைப்படி உயர்வு 3% வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், மொத்த அகவிலைப்படி விகிதம் 63% ஆக உயரும்.

Recommended For You

அகவிலைப்படி அறிவிப்பு தாமதமாவதால் அதிருப்தியடைந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் கூட்டமைப்பு , கடந்த அக்டோபர் 16 அன்று தங்களது பணியிடங்களில் மதிய உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும் மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கு அக்டோபர் 14 அன்று அனுப்பப்பட்ட கடிதத்தில், பல கோரிக்கைகளை முன்வைத்தன.

குறிப்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றை உடனடியாக அறிவிக்க வேண்டும், 2025-26 நிதியாண்டிற்கான தற்காலிக மற்றும் செயல்திறன் சார்ந்த போனஸ் அறிவிக்கப்பட வேண்டும் என கேட்டு கொண்டனர். மறுநாள் அரசாங்கம் போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்ட போதிலும், அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் நிலுவையிலேயே உள்ளது.தசரா பண்டிகை முடிந்து இன்னும் இரண்டு வாரங்களில் தீபாவளி பண்டிகையே வர போகிறது என்பதால் முன் கூட்டியே அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+