மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள அகவிலைப்படி உயர்வு தொடர்பான மிக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். நடப்பாண்டில் இரண்டாவது அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சம்பள உயர்வு கிடைக்கிறது. இந்த இடைபட்ட காலத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இது பணவீக்க விகித அளவின்படி தான் முடிவு செய்யப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் தொழிலாளர் நுகர்வோர் விலை குறியீடு (AICPI-IW) ஜூலை 2026இல் 1.3 புள்ளிகள் அதிகரித்து 153.2 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது ஜூன் மாதக் குறியீடான 151.9-ஐ விட அதிகமாகும்.

ஜூலை 2026-க்கான ஆண்டுளாவிய பணவீக்கம் 4.57 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 2025-ல் இது 2.66 சதவீதமாக தான் இருந்தது. எனவே கடந்த 12 மாதங்களின் சராசரி பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடும்போது, அகவிலைப்படி சுமார் 64.38% ஆக வரும். பெரும்பாலும் அரசு தசம எண்களை முழு எண்களாக கணக்கிடுவதால், இது 64% என நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களிலிருந்து நடைமுறைக்கு வரும். இருப்பினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்த மாதமே வராமல் சில மாதங்கள் கழித்து, பெரும்பாலும் பண்டிகை காலங்களில் வெளியிடப்படுவது வழக்கம்.
தற்போதைய நடைமுறையில் உள்ள அகவிலைப்படி விகிதம் 60% ஆகும். ஒருவேளை DA 60%-லிருந்து 64% ஆக உயர்த்தப்பட்டால், பல்வேறு ஊதிய நிலைகளில் சம்பள உயரும். இதன்படி லெவல் 1 முறையில் அதாவது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபயாக உள்ள ஊழியர்களுகு அகவிலைப்படி 64%ஆக உயரும் அப்போது சம்பளத்துடன் சேர்த்து, 11,520 ரூபாயாக மாறும்.
உயர் பதவிகளில் உள்ள ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் அதிகமாக இருப்பதால், இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அவர்களின் மாத சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீட்டு முறை 7-வது ஊதியக் குழுவின் விதிகளின்படி, கடந்த 12 மாதங்களின் சராசரி AICPI-IW குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஏற்கனவே 8ஆவது சம்பள கமிஷன் தள்ளி போகிறதே என கவகை அடைந்துள்ளனர். இந்நிலையில் அகவிலைப்படி உயர்வாவது திருப்தி அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
பணவீக்க தரவுகளின் படி மத்திய தொழிலாளர் அமைச்சகம் அகவிலைப்படி உயர்வுக்கான பரிந்துரைகளை வழங்கும். மத்திய அமைச்சரவையின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்கு பின்னரே திருத்தப்பட்ட அகவிலைப்படிக்கான இறுதி உத்தரவு வெளியாகும். தீபாவளியை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டாலும் ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு அரியர் தொகை வழங்கப்பட்டு விடும்.


Click it and Unblock the Notifications

