சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் புதிய சம்பளம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு சம்பள கமிஷனையே தாமதமாக தான் அமைத்தது. கடந்த ஆண்டு இறுதியில் தான் சம்பள கமிஷனுக்கான தலைவர் மற்றும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

சம்பள கமிஷன் நாட்டின் பணவீக்கம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அரசோடு கலந்த ஆலோசனை செய்து அரசு ஊழியர்களின் கருத்துக்களை கேட்டு சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை வழங்குவதற்கு கிட்டதட்ட 18 மாதங்கள் தேவைப்படும். இதனை மத்திய அரசு ஏற்று செயல்படுத்துவதற்கு கூடுதலாக சில மாதங்கள் தேவை. எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு 2028 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்துதான் புதிய சம்பளம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஏற்கனவே தங்களுடைய சம்பள உயர்வு இரண்டு ஆண்டுகள் தள்ளிப் போயிருக்கிறது என அதிர்ச்சியில் இருக்கக்கூடிய மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியையாவது உரிய நேரத்தில் வழங்கும் என காத்திருக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகை அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது.

Also Read

தற்போது அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 58% அகவிலைப்படியாக கிடைக்கும் உதாரணமாக ஒரு மாதத்திற்கு 56 ,100 ரூபாய் அடிப்படை ஊதியமாக கொண்ட ஒரு அரசு ஊழியருக்கு அந்த அடிப்படை ஊதிய தொகையோடு சேர்த்து 58% தொகையான 32,538 ரூபாய் தற்போது அகவிலைப்படியாக கிடைக்கிறது. அதாவது மொத்தம் கைக்கு வரக்கூடிய சம்பளம் என்பது சுமார் 83,000 ரூபாயாக இருக்கிறது.

வழக்கமாக அரசு ஜனவரி மாதத்திலும் ஜூலை மாதத்திலும் அகவிலை படியை உயர்த்தி வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி என்பது மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டு விடும். ஜனவரி மாதத்தில் இருந்து முன் தேதியிட்டு அரியர் தொகை வழங்கப்படும். அதேபோல ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு என்பது அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகையின் போது அறிவிக்கப்பட்டு ஜூலை மாதத்தில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும்.

Recommended For You

மத்திய அரசு ஊழியர்கள் கடந்த வாரமே அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால் அது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வரவில்லை. இந்த வாரத்திலாவது அகவிலைப்படி உயர்த்தப்படுமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அகவிலைப்படி 3 சதவீதமாக உயர்த்தப்பட்டால் மாதத்திற்கு 56, 100 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறக்கூடிய ஒரு ஊழியர் அகவிலை படியாக 34,221 ரூபாய் பெறுவார் அதாவது 61% அகவிலை படியாக வழங்கப்படும்.

ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய மீதி தொகையையும் அரியர் தொகையாக கணக்கிட்டு வழங்கி விடுவார்கள். உதாரணமாக இந்த ஊழியருக்கு நான்கு மாதத்திற்கான அரியர் தொகையாக 6732 ரூபாய் கிடைக்கும். ஏன் இந்த முறை இவ்வளவு தாமதமாகிறது என்ற கேள்வி எழுகிறது. தற்போது ஏழாவது சம்பள கமிஷனில் இருந்து எட்டாவது சம்பள கமிஷனை நோக்கி இந்த சம்பள கட்டமைப்பை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்ற வருகின்றன இது தொடர்பான நடைமுறைகள் மற்றும் கணக்கீடுகள் உள்ளிட்டவை தீவிரமாக நடைபெற்று வருவதால் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு தாமதமாவதாக தெரிகிறது.

அதே போல அகவிலைப்படி 50% என்ற அளவை கடந்துவிட்டதால் அதனை அடிப்படை சம்பளத்தோடு இணைக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அது தொடர்பான பணிகள் நடந்துவருகிறதா அதன் காரணமாக அகவிலைப்படி உயர்வு தள்ளி போகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+