பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பில் இந்தியாவில் இருக்கும் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான (Unorganized Sector) வேரியபிள் கொடுப்பனவு தொகையை (VDA) உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அமைப்புசாராத் துறையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு லிவிங் காஸ்ட் பெரும் சுமையாக மாறியிருக்கும் வேளையில், பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க இப்பிரிவு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக மத்திய அரசு தற்போது கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தொழிற்துறை ஊழியர்களுக்கு நாட்டில் நிலவும் நுகர்வோர் பணவீக்கத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து வேரியபிள் கொடுப்பனவு தொகையை (VDA) ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தம் செய்யும்.
கடைசியாக இந்த திருத்தம் ஏப்ரல் 2024ல் செய்யப்பட்டது, இந்த விகிதங்கள் திறமையற்ற (Unskilled), அரைத்திறமையான (Semiskilled), திறமையான (skilled) மற்றும் மிகவும் திறமையான (Highly skilled) தொழிலாளர்கள் மற்றும் பிராந்தியம் A, B மற்றும் C ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு கொடுப்பனவு அளிக்கப்படுகிறது.
தற்போது மத்திய அரசு வேரியபிள் கொடுப்பனவு தொகையில் செய்யப்பட்ட மாற்றங்களுக்குப் பின்பு அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய சம்பள விபரத்தைப் பிரிவு வாரியாக மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கியுள்ளது.
இதன் பின்பு புதிய திருத்தத்திற்குப் பிறகு, "A" என்று வகைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் இருக்கும் கட்டுமானம், வீட்டு பணிகள், சுத்தம் செய்தல், சுமை தூக்குதல் போன்ற திறமையற்ற பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.783 ஆக இருக்கும், இதன் மூலம் மாதத்திற்கு ரூ.20,358 ஆக இருக்கும்.
இதேபோல் அரைத்திறமையான தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.868 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது, இதன் மூலம் மாதத்திற்கு ரூ.22,568 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
திறமையான, அலுவலக மற்றும் காவல் பணியில் இருப்பவர்கள், ஆயுதம் இல்லாமல் காவல் பணியில் இருப்பவர்களுக்குத் திருத்தப்பட்ட புதிய ஊதிய விகிதம் மூலம் ஒரு நாளுக்கு ரூ.954 அல்லது மாதத்திற்கு ரூ.24,804 ஆக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மிகவும் திறமையான மற்றும் காவல் பணியில் இருப்பவர்கள், ஆயுதங்கள் உடன் காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.1,035 அல்லது மாதத்திற்கு ரூ.26,910 ஆக இருக்கும் என்று மத்திய அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த குறைந்தபட்ச ஊதிய திருத்தம் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதன் மூலம் ஒவ்வொரு கார்ப்பரேட், அரசு அலுவலங்களில் பணியாற்றுவோருக்கான சம்பளம் உயர்த்தப்படும்.
இது அனைத்து இடத்திலும் நடைமுறை செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு, ஆனால் பெரும்பாலான நேரத்தில் வகைப்படுத்தாத துறையில் இருக்கும் பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளம் கூட உறுதி செய்யப்படுவது இல்லை என்பது தான் பல பணியாளர்கள் கூறும் குற்றச்சாட்டு. ஆனால் மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதிய திருத்தம் பலருக்கும் பலன் அளிக்கும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications