மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? அடுத்த வாரமே குட் நியூஸ் என தகவல்

இந்தியாவை சேர்ந்த 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலை படியை உயர்த்தி வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பள உயர்வு அளிக்கப்படும், இடைப்பட்ட ஆண்டுகளில் விலைவாசி உயர்வை ஈடுகட்ட அகவிலைப்படி உயர்த்தப்படும்.

அடிப்படை சம்பளத்தில் ஒரு கணிசமான தொகை அகவிலைப்படியாக கிடைக்கும். தற்போது அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 58% தொகை அகவிலைப்படியாக கிடைக்கிறது. வழக்கமாக ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு என்பது மார்ச் மாதத்திலும், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு என்பது அக்டோபர் மாதத்திலும் வெளியிடப்படும். அதாவது ஹோலி பண்டிகை , தீபாவளி பண்டிகை பரிசாகவும் இருக்கட்டும் என்ற நோக்கத்தில் அரசு ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவது வழக்கம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? அடுத்த வாரமே குட் நியூஸ் என தகவல்

இந்த ஆண்டு மார்ச் மாதமே முடிவடைய போகிறது, ஆனால் இதுவரை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. புதன்கிழமை அன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் என லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருந்தனர். ஆனால் அது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பெரும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

நுகர்வோர் குறியீடு தரவுகள் அடிப்படையில் தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்படும் அந்த வகையில் இந்த முறை இரண்டு சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு ஊழியர்கள் தங்களுடைய அடிப்படை சம்பளத்தில் 58 சதவீத தொகையை அகவிலை படியாக பெறுகிறார்கள் அது இரண்டு சதவீதமாக உயர்த்தும்போது 60%ஆக மாறும். அகவிலைப்படி தாமதமானாலும் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து கணக்கிடப்பட்டு பாக்கி தொகையும் சேர்த்து அரியர் தொகையாக வழங்கப்பட்டு விடும்.

Also Read

ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு எட்டாவது சம்பள கமிஷன் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்தே புதிய சம்பளம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் மத்திய அரசு சம்பள கமிஷன் அமைப்பதையே தாமதப்படுத்தி விட்டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, ஓய்வூதிய உயர்வு இரண்டு ஆண்டுகள் தள்ளிப் போயிருக்கிறது. இந்த சூழலில் அகவிலை படியாவது குறித்த நேரத்தில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் அரசு தாமதப்படுத்தி வருவது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்த வைத்திருக்கிறது.

Recommended For You

நாட்டில் பணம் வீக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசு ஏன் அகவிலைப்படி உயர்வை அறிவிக்காமல் தாமதப்படுத்துகிறது என என அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். அடுத்த வாரத்திலாவது அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையே கடந்த ஆண்டில் மார்ச் 28ஆம் தேதி தான் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியானதால் நாளை அல்லது அடுத்த வார தொடக்கத்திலேயே அரசு நல்ல செய்தியை வெளியிடுமென சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+