மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமனம் செய்யப்படும் சம்பள கமிஷனால் மாற்றப்படுகிறது. தற்போது 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
சம்பள கமிஷன் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகை மாற்றி அமைக்கப்பட உள்ளது . வரும் ஜனவரி 1ஆம் தேதி முதலே புதிய ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் ஆனால் சம்பள கமிஷனே இப்போதுதான் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதால் புதிய ஓய்வூதிய தொகை 2028 ஜனவரியில் இருந்து கிடைப்பதற்கு தான் வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அதில் முக்கியமானது மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடைக்காது , ஓய்வு காலத்தில் கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நிதி சட்டம் 2025 இன் படி மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் சம்பள கமிஷன் அடிப்படையிலான ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து பலன்களையும் நீக்கிவிட்டது , எனவே எட்டாவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும்போது இதுநாள் வரை கிடைத்த பல்வேறு பலன்கள் நிறுத்தப்பட போகின்றன என அதில் தகவல் இடம் பெற்றிருக்கிறது .
இது போலியான தகவல் என தெரிவித்திருக்கும் மத்திய அரசின் PIB fact check அமைப்பு மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கக்கூடிய எந்த ஒரு பலன்களையும் ரத்து செய்யவில்லை என விளக்கம் தந்திருக்கிறது. போலி தகவல்களை நம்பி ஓய்வூதியதாரர்கள் ஏமாற வேண்டாமென்றும், அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு எப்பொழுதுமே அரசின் அதிகாரப்பூர்வ அமைப்புகளை மட்டுமே நம்புங்கள் என்றும் தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் தற்போது கிடைப்பதை போலவே சம்பளம் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம், சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் ஆண்டுக்கு இரண்டு முறை கிடைக்கக்கூடிய அகவிலை படியும் தொடர்ந்து கிடைக்கும் என தெரிவித்திருக்கிறது. பணியில் இருக்கும் போது தவறான செயல்களுக்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே ஓய்வூதிய பலன்கள் என்பது நிறுத்தி வைக்கப்படும் என விதி முறை இருக்கிறது அதனை தவறாக அனைவரும் பரப்பி வருகிறார்கள் என கூறி இருக்கிறது.
முன்னதாக நாடாளுமன்றத்திலும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கச் சவுத்ரி 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நிதி பலன்களும் கிடைக்கும் என உறுதி அளித்திருந்தார்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications