இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று தீர்மானிக்கப்போகும் பொது தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் வேளையில், தேர்தலுக்கு முன்னதாக மோடி அரசு அனைத்து தரப்பு மக்களை கவரும் வகையில் 6 முக்கியமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வியாழக்கிழமை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை அறிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, பேசிய பியூஷ் கோயல் உத்தர பூர்வா திட்டத்திற்கு ரூ. 10,037 கோடியும், லட்சிய திட்டமான இந்தியாஏஐ மிஷன்-க்கு க்கு ரூ.10,371.92 கோடியும் ஒதுக்குவதாக அறிவித்தார்.

இதேவேளையில் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கடன் தள்ளுபடிக்கான சட்டப்பூர்வ ஆதரவைப் பெறுவதற்காக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் மத்திய அரசு எவ்விதமான அறிவிப்பையும் இதை தொடர்பாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசின் பணிகளில் பணியாற்றி வரும் 49.18 லட்சம் ஊழியர்கள் மற்றும் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடையும் வகையில், நாட்டின் பணவீக்க அளவீட்டை ஒப்பிட்டு மத்திய அமைச்சரவை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் தற்போதைய 46 சதவீதத்தை ஒப்பிடுகையில் 4% அதிகரிப்பை ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் இனி 50 சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த உயர்வால் மத்திய அரசுக்கு வருடம் 12,868.72 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலிண்டர் மானியம்: மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி 10.27 கோடி மக்கள் பயனடைவதாகக் கூறப்படும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கு அளிக்கப்படும் 300 ரூபாய் மானிய சலுகையை அடுத்த ஒரு வருடத்திற்குத் தொடர பிரதமர் மோடியின் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்திற்காக 2024-25 நிதியாண்டில் அரசுக்கு மொத்த செலவினமாக ரூ.12,000 கோடியாக இருக்கும். மேலும் சிலிண்டர் மானியம் பெற தகுதியுள்ளவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக 300 ரூபாய் மானியம் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP): 2024-25 காலகட்டத்திற்கான சணலின் (JUTE) குறைந்தபட்ச ஆதரவு விலையில் குவிண்டாலுக்கு ரூ. 5,335 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தற்போது ஒரு குவிண்டாலுக்கு 5,050 ரூபாயாக இருக்கும் வேளையில் மத்திய அரசு MSPயில் 5.6% அதிகரித்துள்ளது.
IndiaAI MISSION திட்டம்: செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியின் ஒரு உந்துதலுக்காக, இந்திய அரசில் பல்வேறு AI தொழில்துறை திட்டங்களுக்கிடையில், ஸ்டார்ட்அப் மூலதனத்தை வழங்குவதற்கும், சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்கும் நிதியளிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.10,371 கோடி நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.
உத்தர பூர்வா திட்டம்: இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தை இலக்காகக் கொண்டு, தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக ரூ.10,037 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 10 ஆண்டுக் கால திட்டமாகும்.
More From GoodReturns

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? அடுத்த வாரமே குட் நியூஸ் என தகவல்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications