இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் வர்த்தக விரிவாக்கத்தில் ஈட்டுப்பட்டு இருக்கிறது, குறிப்பாக ரீடைல் மற்றும் FMCG துறையில் அதிகப்படியான நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு உள்ளது.
ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடைல், அதானி குழுமம், டாடா குழுமம் ஆகியவை FMCG துறையில் இறங்கியுள்ளது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல கோடி ரூபாய் முதலீட்டை செய்து நாடு முழுவதும் விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்த நிலையில் இத்துறையில் டாபர் நிறுவனம் இறங்க முடிவு செய்துள்ளதால், ஏற்கனவே இத்துறையில் இருக்கும் ஐடிசி போன்ற நிறுவனங்களுக்குக் கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது.
டாபர் நிறுவனம்
டாபர் நிறுவனம் ஆயுர்வேத பொருட்கள், ஹெல்த்கேர், ஹேர் கேர், ஸ்கின் கேபர், டூத்பேஸ்ட், ஹோம் கேர் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான பொருட்களை மட்டுமே இதுவரையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. உணவு மற்றும் FMCG துறையில் இருந்தாலும் மிகவும் குறைவான பொருட்களை மட்டுமே கொண்டு சிறிய வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.
FMCG வர்த்தகம்
இந்த நிலையில் இதை விரிவாக்கம் செய்ய டாபர் நிறுவனம் மெயின்ஸ்ட்ரீம் FMCG வர்த்தகத்தில் இறங்குவதற்காகவும், ஐடிசி உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களுடன் போட்டிப்போட இதைவிடச் சரியான காலகட்டம் கிடைக்காது என்பதில் தெளிவாக உள்ளது.
பாட்ஷா மசாலா
இதையடுத்து டாபர் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் மசாலா விற்பனையில் இறங்குவதற்காகப் பாட்ஷா மசாலா நிறுவனத்தில் சுமார் 51 சதவீத பங்குகளைச் சுமார் 587.5 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில். பங்குகள் கைமாற்றம் மார்ச் 31, 2023க்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
51 சதவீத பங்குகள்
டாபர் நிறுவனம் பாட்ஷா மசாலா நிறுவனத்தின் 51 சதவீத பங்கு கைப்பற்றுதல், கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் பங்குதாரர்கள் ஒப்பந்தத்தின்படி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே நடக்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
1152 கோடி ரூபாய் மதிப்பீடு
இது மட்டும் அல்லாமல் டாபர் நிறுவனம், பாட்ஷா மசாலா நிறுவனத்தின் 51 சதவீத பங்கு தற்போது கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது போல், அடுத்த 5 வருடத்தில் மீதமுள்ள 49 சதவீத பங்குகளையும் கைப்பற்ற உள்ளதாக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் பாட்ஷா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1152 கோடி ரூபாயாக உள்ளது.
500 கோடி ரூபாய் இலக்கு
இந்த நிறுவனத்தின் மூலம் டாபர் நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் உணவு பிரிவில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் வர்த்தகத்தை அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இந்தக் கைப்பற்றல் மூலம் டாபர் அதிகாரப்பூர்வமாக 25000 கோடி ரூபாய் மதிப்பிலான மசாலா சந்தையில் நுழைந்துள்ளது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம் தனது FMCG வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் புதிய பிராண்டுகளை உருவாக்காமல் ஏற்கனவே சந்தையில் இருக்கும் நிறுவனங்களை வாங்கி வேகமாக விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இதற்காகக் கவின்கேர் குழுமத்தின் கார்டன் நம்கீன்ஸ், லஹோரி ஜீரா, பிந்து பீவரேஜஸ் ஆகிய பிராண்டுகளையும் அதன் வர்த்தகத்தையும் கைப்பற்றித் தனது FMCG வர்த்தகப் பிரிவில் இணைக்க முடிவு செய்துள்ளதாக இந்த மாத துவக்கத்தில் செய்திகள் வெளியானது.


Click it and Unblock the Notifications