இந்தியாவின் முன்னணி ஆயுர்வேதம் மற்றும் FMCG நிறுவனமாக இருக்கும் டாபர்-ன் தலைமுடி தயாரிப்புகள் பயன்பாட்டின் மூலம் கருப்பை புற்றுநோய் (ovarian cancer மற்றும் uterine cancer) பாதிப்பு ஏற்படுவதாக டாபரின் 3 கிளை நிறுவனங்கள் மீது அமெரிக்கா மற்றும் கனடாவில் பவ்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளது.
டாபர் நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான நமஸ்தே லேப்ஸ் LLC ("Namaste"), டெர்மோவிவா ஸ்கின் எசன்ஷியல் இன்க் ("Dermoviva"), டாபர் இண்டர்நேஷ்னல் லிமிடெட் ("DINTL") ஆகிய கிளை நிறுவனங்கள் மீது அமெரிக்கா மற்றும் கனடாவில் பவ்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து டாபர் நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், தற்போது தொடுக்கப்பட்டு உள்ள வழக்குகள் அனைத்தும் ஆரம்ப கண்டுபிடிப்பு கட்டங்களில் இருந்து வந்தவை. தற்போது, MDL பிரிவில் சுமார் 5,400 வழக்குகள் நமஸ்தே, டெர்மோவிவா மற்றும் டாபர் இண்டர்நேஷ்னல் நிறுவனபெயர்களுடன் நேரடியாகவும், பிற நிறுவனங்களுடன் சேர்க்கப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன.
மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற மற்றும் முழுமையடையாத ஆய்வின் அடிப்படையில் இருப்பதால், டாபர் குழுமத்தின் துணை நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளது. மேலும் வழக்குகளை எதிர்கொள்ள வழக்கறிஞர்கள் கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஃபார்மால்டிஹைட் (Formaldehyde) கொண்ட சில முடி நேராக்க பயன்படுத்தும் ப்ராடெக்ட்களை தடை செய்ய அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. அவை ஹார்மோன் தொடர்பான புற்றுநோய்களுடன் தொடர்புடையவை மற்றும் நீண்ட கால உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது என்று ஃபாக்ஸ் பிசினஸ் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மொத்தமாக ஃபார்மால்டிஹைட் மற்றும் ஃபார்மால்டிஹைட் கெமிக்கல் உருவாக்கும் மெத்திலீன் கிளைகோல் அடங்கிய ஹேர் ஸ்ட்ரைட்னிங் பொருட்களை மொத்தமாக தடை செய்ய திட்டமிட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த முடி திருத்த பொருட்களால் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய கார்சினோஜென் கெமிக்கலை கொண்டு உள்ளது.
அமெரிக்காவின் National Institutes of Health அமைப்பு 33500 பெண்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் Hair straightening products அதிகம் பயன்படுத்தும் பெண்களுக்கு uterine cancer ஆபத்து இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாகவும், இதன் மூலம் குழந்தை பிறப்பிலும் பிரச்சனை இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இந்த ஆய்வில் பங்கு பெற்ற அமெரிக்க பெண்களில் சுமார் 60 சதவீதம் பேர் ஹேர் ஸ்ட்ரைட்னிங் பொருட்களை பயன்படுத்துபவர்கள்.


Click it and Unblock the Notifications