சென்னை: தமிழ்நாட்டு ஐடி முதல் உணவுப் பொருட்கள் வரை, ராக்கெட் முதல் நியூக்ளியர் சயின்ஸ் வரையில் அனைத்து துறைக்கும் ஏற்ற முதலீட்டுத் தளமாக இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024-ல் இந்த வருடத்தின் துவக்கத்தில் தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்ட ரூ.51,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், ரூ.17,616 கோடி மதிப்பிலான திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற முக்கிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலையில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் TRB ராஜா எக்ஸ்-ல் நாளை மற்றொரு பெரிய நிறுவனம் தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளைத் துவங்க உள்ளது. யார் இந்த பெரிய நிறுவனம் என்பதை நாளை வெளியிடப்படும் வெயிட் பண்ணுங்க எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சரியாக 11.45 மணிக்கு TRB ராஜா டிவிட்டரில் கலக்கல் பதிவை வெளியிட்டார்.
தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் TRB ராஜா தனது எக்ஸ் பதிவில், டாபர் இந்தியா வெல்கம் டூ தமிழ்நாடு. சொல்லப்போனால் தென்னிந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறோம்!
தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில், கைடென்ஸ் தமிழ்நாடு மற்றும் டாபர் இந்தியா இன்று விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் பகுதியில் உள்ள SIPCOT உணவுப் பூங்காவில், தென்னிந்தியாவில் முதல் முறையாக உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

டாபர் இந்த தொழிற்சாலையை சுமார் ரூ.400 கோடி முதலீடு அமைக்க உள்ளது, இதில் 250 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இது மிகவும் முக்கியமாக, அருகிலுள்ள டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இந்த தொழிற்சாலைக்குத் தேவையான விவசாய பொருட்களை விற்க புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.
முதலமைச்சரும், நானும் டெல்டாகாரர்கள், டெல்டா பகுதிக்கு மிகவும் அவசியமான, விவசாயிகளுக்கு புதிய வர்த்தக வாய்ப்பு திறக்கும் வகையில் புட் பிராசசிங் தொழிற்சாலையைக் கொண்டு வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என டிஆர்பி ராஜா தனது பதிவில் தெரிவித்தார்.

டாபர் அதன் ஹோம் கேர், பர்சன்ல கேர் மற்றும் ஜூஸ் தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்றது, மேலும் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுப்பது எங்கள் மாநிலத்தின் செழித்து வரும் தொழில்துறை சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்குத் தயாராக இருக்கும் தொழிலாளர் படை கிடைப்பதற்கான சான்றாகும்.
விரைவில் டாபர் இந்தியாவில் மேடு இன் தமிழ்நாடு ரியல் ஜூஸ் ருசிக்கப் போகிறோம் என டிஆர்பி ராஜா தனது பதிவை முடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications