இந்தியாவில் நாளொன்றுக்குச் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளின் அளவு 36 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிப்ரவரி 2022 தினசரி UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 24 கோடியாக இருந்தது. அதே 2023 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 50% உயர்ந்து 36 கோடியாக உள்ளது.
இதுவே பரிவர்த்தனைகளின் மதிப்பீட்டைக் கணக்கிடும் போது 2023 பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளுக்கு 6.27 லட்சம் கோடி ரூபாயாகவும் பிப்ரவரி 2022ல் 5.36 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பரிமாற்றத்தின் மதிப்பு 17% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
UPI vs NEFT பரிவர்த்தனைகள்!
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மொத்த யூபிஐ பரிவர்த்தனைகள் எண்ணிக்கை சுமார் 800 கோடியைத் தாண்டியுள்ளது. அதேசமயம் NEFT தினசரி பரிவர்த்தனைகள் பிப்ரவரி 28 அன்று 3.18 கோடியாக உயர்ந்துள்ளது.
804 கோடி பரிவர்த்தனை
2017 ஜனவரியில் 0.45 கோடியாக இருந்த UPI பரிவர்த்தனைகளின் அளவு பலமடங்கு அதிகரித்து 2023 ஜனவரியில் 804 கோடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம் UPI பரிவர்த்தனைகளின் மதிப்பு வெறும் ரூ.1,700 கோடியிலிருந்து ரூ.12.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
UPI டச் பாயிண்ட்
டிஜிட்டல் பேமெண்ட்ஸ் உள்கட்டமைப்பை ஏற்றுக்கொள்வது 17 கோடி டச் பாயிண்டுகளில் இருந்து 53% உயர்ந்து 26 கோடி டச் பாயின்ட்டுகளாக எட்டியுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன. டச் பாயின்ட் என்று டிஜிட்டல் பணப் பரிமாற்றம் ஏற்றுக்கொள்ளும் இடங்களின் எண்ணிக்கை
RBI கவர்னரின் கணிப்பு!
2022 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 இல் யூபிஐ பரிவர்த்தனைகள் 50% வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், நாட்டின் முதன்மை டிஜிட்டல் பேமெண்ட் தளமான யூபிஐ நாளொன்றுக்கு ஒரு பில்லியன் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் அலைவரிசையைக் கொண்டுள்ளது நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
தற்போது UPI மூலம் நாளொன்றுக்குச் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையானது 26 கோடியில் இருந்து 36 கோடி வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது எனவும் சக்திகாந்த தாஸ் அவர்கள் கூறியுள்ளார்.
UPI பேமெண்ட் சர்வீசஸ்!
யுனிபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI) என்பதை NPCI (National Payments Corporation of India) 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் முறையில் மக்கள் எளிதாகப் பணப்பரிவர்த்தனைகளைச் செய்யும் நோக்கத்திற்காக இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
UPI பேமெண்ட்களின் எண்ணிக்கையானது கடந்த 12 மாதங்களில் தினசரி பரிவர்த்தனைகள் 36 கோடியை மீறும் அளவுக்கு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications