இன்றைய வேகமான உலகில் பலரும் நகர வாழ்க்கையின் பரபரப்பான சூழலுக்கும், அங்கு வழங்கப்படும் குறைந்த வருமானத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் வந்து போகிறது. இப்படி நினைப்பவர்களுக்கு என்ன தொழில் செய்வது? எப்படி செய்வது? என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு விவசாயம் சார்ந்த தொழில்கள் நல்ல வாய்ப்புகளை வழங்குகின்றன. எனவே நீங்கள் ஒரு பால் பண்ணை தொழிலைத் தொடங்கலாம்.
பால் பண்ணை தொழில் தொடங்குவதற்கு என்னென்ன விஷயங்கள் அவசியம்?, எவ்வளவு முதலீடு தேவைப்படும்? என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம். கிராமப்புறங்களில் பால் பண்ணை அமைக்க முதலில் நீங்கள் ஒரு பண்ணையை தயார் செய்ய வேண்டி வரும். அதற்கு உங்களுக்கு நிலம் தேவைப்படலாம். ஆரம்பத்தில் நிலம் பெரியதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் 2 முதல் 3 எருமைகள் அல்லது பசுக்கள் வசதியாக இருப்பதற்கு போதுமான இடம் இருக்க வேண்டும்.

எவ்வளவு செலவாகும்?: நிலம் உங்களுடையதாக இருந்தால் செலவுகள் சற்று குறைவு தான். ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநிலத்திலும் எருமை மாடுகள் மற்றும் பசுவின் விலை மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே இந்த பதிவில் தோராயமான மதிப்பீட்டைப் பார்ப்போம். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் எருமைகள் 70,000 முதல் 90,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் மூலம் ஒரு நாளைக்கு 15 முதல் 18 லிட்டர் வரை பால் கிடைக்கும். அதேபோல அதிக பால் கொடுக்கும் எருமை மாடுகள் இன்னும் விலை உயர்ந்ததாக இருக்கும். ஆனால் ஒரு எருமையின் நிலை 80,000 வரை இருக்கும். எனவே ஒரு எருமையின் விலை 80,000 ரூபாய் வரை இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். சற்று பேரம் பேசி வாங்கினால் இரண்டு எருமைகளை 1.50 லட்சம் ரூபாய்க்குள் வாங்கிவிடலாம். அதேபோல இந்த மாடுகளுக்கு உணவளிக்கவும் செலவிட வேண்டி இருக்கும்.
இதற்கான தீவனம், பண்ணை செலவு போன்றவற்றுக்கும் செலவாகலாம். நீங்கள் இரண்டு மாடுகளை வாங்கி இருந்தால் மாதத்திற்கு 5,000 முதல் 6,000 ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும். 2 எருமைகளை வைத்து பால் வணிகம் தொடங்கினால் மொத்தமாக 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி வரலாம். இது நிலத்தை தவிர்த்த மதிப்பீடாகும்.
வருமானம்: பால் விலையும் பகுதி நீங்கள் வசிக்கும் பகுதியை பொறுத்து மாறுபடலாம். ஒரு கூட்டுறவு நிறுவனத்தில் இணைந்து பாலை வழங்கினால் வழக்கமான வருமானமாக நிர்ணயிக்கப்பட்ட தொகை கிடைக்கும். இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் வாடிக்கையாளர்களை தேட வேண்டிய அவசியம் இல்லை. எருமை பாலை லிட்டருக்கு 65 முதல் 70 ரூபாய்க்கு விற்கலாம்.
2 எருமைகளையும் சேர்த்து வாங்கினால் 30 லிட்டர் வரையும் பால் கிடைக்கும். ஒரு லிட்டர் பால் 65 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் தினசரி வருமானமாக 30 லிட்டருக்கு 1950 ரூபாய் வரை தோராயமாக பெறலாம். ஒரு மாதத்தில் எளிதாக 60,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இதில் பண்ணையின் செலவு, தீவனச் செலவு போன்றவற்றிற்காக ரூ.10,000-த்தை நீக்கினால் மாதாந்திர லாபமாக 50,000 ரூபாய் வரை கிடைக்கும்.
இந்த தொழில் அனைவருக்குமே ஏற்றதா என்று கேட்டால் அப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அனைவருக்கும் விலங்குகளை கையாள்வது என்பது தெரியாமல் இருக்கலாம். எனவே இந்த தொழிலை தொடங்குவதற்கு முன்பு உங்களால் இதைச் செய்ய முடியுமா? என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். பாலின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பார்த்தோம். இந்த பாலை வைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை செய்தால் இதைவிட அதிகமான வருமானம் பெறலாம். உதாரணமாக பன்னீர், பட்டர், பால் பவுடர், நெய், தயிர் போன்ற பொருட்களையும் விற்பனை செய்யலாம். இதன் விலையும் நகரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
அதோடு வருமானம் உங்கள் நகரங்களில் விற்கும் பால் மற்றும் பிற பொருட்களின் விலைக்கு ஏற்ப மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் இருந்தால் வருமானமும் அதிகரிக்கலாம். அதேசமயம் உங்கள் பகுதியில் குறைவான வாடிக்கையாளர்கள் இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் வருமானம் கிடைக்கும். மேலும் மேலே கூறப்பட்டுள்ள பதிவு தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கான ஐடியா மட்டுமே. தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நன்கு யோசித்து சுய விருப்பத்தின் பெயரில் தொழில் தொடங்கவும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications