இந்தியாவில் உணவு பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தற்போது பெரும்பாலான காய்கறிகள், உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
இதனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது மட்டும் அல்லாமல் இந்த நிலை அடுத்த சில வாரங்களுக்கு தொடர்ந்தால் ஏழை மக்கள் பட்டினி கிடக்கும் நிலை உருவாகும் என்ற அச்சம் நிலவுகிறது.

ஏற்கனவே நாடு முழுவதும் மக்களின் அடிப்படை உணவுகளான தக்காளி, அரிசி, மிளகாய், இஞ்சி, பல காய்கறிகளின் விலை உயர்ந்த காரணத்தால் மக்கள் மாற்று உணவுகளுக்காக கடந்த சில நாட்களாக பருப்பு வகைகளை அதிகமாக சாப்பிட துவங்கினர். இதன் விளைவு இதற்கும் சப்ளை டிமாண்ட் உருவாகி விலை அதிகரிக்க துவங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் மட்டுமே பருப்பு வகைகளின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது, தற்போதைய சப்ளை டிமாண்ட் பிரச்சனையில் பருப்பு விலை தொடர்ந்து அதிகரிக்கும் என தெரிகிறது. உணவு பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு பல முயற்சிகள் எடுத்தாலும் அதிகப்படியாக மழை காரணமாக விவசாய உற்பத்தி பெரிய அளவில் பாதித்துள்ளது.
இதனால் மத்திய அரசு நியாயவிலை கடைகள் மூலம் அளித்து வரும் மானிய திட்டங்கள் தொடர்ந்து அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் அறிமுகம் செய்ய நியாயவிலை கடை மானிய திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் இந்த திட்டத்தை மத்திய அரசு நிறுத்துவது குறித்து ஆலோசனை செய்யது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாத கடைசியில் தக்காளி விலை உயர்ந்த காரணத்தால் மே மாதம் 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.25 சதவீதமாக குறைந்த ரீடைல் பணவீக்கம், ஜூன் மாத 4.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாத பணவீக்கத்தில் உணவு பொருட்கள் விலை உயர்வு மூலம் நாட்டின் பணவீக்கம் எந்த அளவுக்கு மோசமாகிறது என்பது தெரியவரும். உணவு பணவீக்க அளவு மே மாதத்தில் 2.91 சதவீதத்திலிருந்து ஜூன் மாதத்தில் 4.49 சதவீதமாக உயர்ந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் தக்காளி மற்றும் சில முக்கிய காய்கறிகளுக்கு பின்பு அதிகப்படியான விலை உயர்வை சந்திக்கப்போவது பருப்பு வகைகள் தான். கடந்த 5 மாதத்தில் பருப்பு விலை மீதான பணவீக்கம் கிட்டதட்ட இரட்டிப்பாகியுள்ளது என CRISIL தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் பருப்பு வகைகள் மீதான பணவீக்கம் 10.58 சதவீதமாகும்.
ஏற்கனவே அரிசி விலை 10 சதவீதமும், கோதுமை விலை 12 சதவீதமும் உயர்ந்துள்ள நிலையில் பருப்பு விலையும் 10 சதவீதம் உயர்ந்துள்ளது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் அனைத்து மாநில மக்களின் அடிப்படை உணவுகளின் விலை உயர கூடும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications