டால்மியா பாரத் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டால்மியா சிமெண்ட், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் குழுமத்தின் 9.4 மில்லியன் டன் மொத்த சிமெண்ட் உற்பத்தி தளத்தை மொத்தமாகக் கைப்பற்ற உள்ளது.
இந்தக் கைப்பற்றல் ஒப்பந்தம் மூலம் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்-க்கு சொந்தமான சிமெண்ட், கிளிங்கர் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை வாங்க உள்ளது டால்மியா சிமெண்ட். இதில் முக்கியமாக 6.7 மில்லியன் டன் திறன் கொண்ட கிளிங்கர் மற்றும் 280 மெகாவாட் அனல் மின் நிலையங்கள் அடங்கும்.
இந்தக் கட்டமைப்புகள் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ளன.
டால்மியா சிமெண்ட்
டால்மியா சிமெண்ட், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் குழுமத்தின் 9.4 மில்லியன் டன் மொத்த சிமெண்ட் உற்பத்தி தளத்தை மொத்தமாகச் சுமார் 5,666 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் கூட்டாளிகள், ப்ரோமோட்டகள், ஒழுங்குமுறை அதிகாரிகள் ஆகியோர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பின்பு தான் வெற்றிகரமாக முடிவடையும்.
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்
அக்டோபர் மாதம் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் ஜெய்பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் ஆகியவை தங்களது கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தங்கள் சிமெண்ட் வணிகத்தையும் சில முக்கியச் சொத்துக்களையும் விற்பனை செய்வதாக அறிவித்தது.
சிமெண்ட், மின்சாரம்
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸின் ஆண்டு அறிக்கையின்படி, ஜெய்பி குழுமம் (ஜெய்பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தையும் சேர்த்தது) தற்போது ஆண்டுக்கு 10.55 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் தளத்தையும்,339 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் தளத்தைக் கொண்டுள்ளது.
மத்திய இந்தியா
Jaypee குழுமத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான சிமெண்ட் தொழிற்சாலைகள் மத்திய இந்திய பகுதியில் அமைந்துள்ளது. மொத்த சிமெண்ட் திறனில் 1.2 MTPA உற்பத்தி தளம் கர்நாடகாவில் இருந்தாலும். இது சில கடந்த காலமாக உற்பத்தி செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது, ஆனாலும் விரிவாக்கக் கட்டத்தில் உள்ளது.
சிமெண்ட் தொழிற்சாலை
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 2016 ஆம் ஆண்டிலேயே 21.2 MTPA உற்பத்தி செய்யும் சிமெண்ட் தொழிற்சாலையை விற்பனை செய்தது தற்போது 9.4 மில்லியன் டன் மொத்த சிமெண்ட் உற்பத்தி தளத்தையும், 6.7 மில்லியன் டன் திறன் கொண்ட கிளிங்கர் மற்றும் 280 மெகாவாட் அனல் மின் நிலையத்தையும் விற்பனை செய்ய உள்ளது.
டால்மியா சிமெண்ட் வர்த்தகம்
டால்மியா சிமெண்ட் நிறுவனம் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் சொத்துக்களை வாங்குவது மூலம் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும். தற்போது டால்மியா தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மட்டுமே வர்த்தகத்தை அதிகமாக வைத்துள்ள நிலையில் இந்த 6000 கோடி ரூபாய் டீல் மூலம் மத்திய இந்திய பகுதியில் பெரிய அளவிலான வர்த்தகத்தை உருவாக்க முடியும்.
கௌதம் அதானி முயற்சி
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரும், உலகின் 4வது பெரிய பணக்காரராகவும் விளங்கும் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குரூப் ஏற்கனவே 2 சிமெண்ட் நிறுவனத்தை வாங்கிய நிலையில் 3வதாக ஒரு சிமெண்ட் நிறுவனத்தை வாங்க ஜெய்பிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகச் சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.
இரண்டு நிறுவனம்
இந்தச் சிமெண்ட் உற்பத்தியில் தற்போது ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் மற்றும் அதானி குழுமம் கைப்பற்றிய ஹோல்சிம் ஆகிய இருந்து நிறுவனங்கள் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications