குஜராத்தை சேர்ந்த தர்ஷன் படேல் வர்த்தகத்தில் எந்தவொரு பெரிய முன் அனுபவம் இல்லாமல் நுகர்வோர் பொருட்கள் துறையில், ஃபாக் போன்ற பல ஐகானிக் பிராண்ட்டுகளை உருவாக்கியவர்.
சாமானிய மக்கள் பொதுவாக அம்பானி, அதானி போன்ற பெரிய தொழிலதிபர்களை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் சத்தம் இல்லாமல் பெரிய அளவில் வர்த்தகத்தில் சாதனை படைத்து வரும் பல தொழிலதிபர்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படிப்பட்ட ஒரு தொழிலதிபர்களில் ஒருவர்தான் தர்ஷன் படேல். இவரும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை சேர்ந்தவர் தான். பிரபல FOGG பிராண்டின் உரிமையாளரான வினி காஸ்மெட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் தர்ஷன் படேல். இன்று இவரது சொத்து மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி.
இன்று பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை கட்டி ஆளும் தர்ஷன் படேல் வர்த்தகம் தொடர்பாக முறையான கல்வியை பெறவில்லை அல்லது ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமோ கிடையாது. இருந்தபோதிலும் அவர் தனது பாதையை சுத்த உறுதிப்பாடு மற்றும் புதுமை மூலம் அமைத்தார்.
தர்ஷன் படேல் ஆரம்பத்தில் தனது குடும்பத்தின் நிறுவனமான பாராஸ் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற மருந்து நிறுவனத்தை நடத்தி வந்தார். தர்ஷன் படேல் தனது தனித்துவமான திறமைகள் மற்றும் திறன்கள் அந்த நிறுவனத்தை இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மருந்து நிறுவனமாக உயர்த்தினார்.
மூவ், கிராக், இட்ச்கார்ட், டெர்மிகூல் மற்றும் டி கோல்ட் போன்ற பிராண்டுகளை உருவாக்கினார். இந்த பிராண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல், குடும்பங்களில் உச்சரிக்கப்படும் பெயர்களாகவும் அமைந்தது.
இவரது தலைமையில் பாராஸ் பார்மாசூட்டிக்கல்ஸ் சிறப்பான வளர்ச்சி கண்டு வந்தது. இந்நிலையில், தர்ஷன் படேல் 2010ம் ஆண்டில் பாராஸ் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தை ரூ.3,260 கோடிக்கு விற்பனை செய்தார். இருப்பினும் அவரது தொழில்முனைவோர் மனப்பான்மை மற்றும் புதிய பிராண்டுகளை உருவாக்கும் ஆர்வம் ஆகியவை புதிய வர்த்தகத்தை தொடங்க செய்தது.
2011ம் ஆண்டில் வினி காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின்கீழ், தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் பாடி ஸ்ப்ரேயான ஃபாக் பிராண்டை அறிமுகம் செய்தார். கேஸ் அடிப்படையிலான டியோடரண்டுகள் நிறைந்த சந்தையில், ஃபாக்கை அறிமுகம் செய்தார். கேஸ் இல்லை, வீணாகாது, 800 ஸ்ப்ரேக்கள் உத்தரவாதம் என்ற தர்ஷன் படேலின் தனித்துவமான மார்க்கெட்டிங் நுகர்வோரை வெகுவாக ஈர்த்தது.
இதனால் ஃபாக் வெகு விரைவில் நுகர்வோரின் வரவேற்பை பெற்றது. தர்ஷன் படேலின் தலைமையின் கீழ், வினி காஸ்மெட்டிக்ஸ் வர்த்தகம் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் விரிவடைந்துள்ளது. நுகர்வோர் பற்றிய அவரது ஆழமான புரிதலே அவரது வெற்றிக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications