அஸ்திவாரம் போடலாம்.. தரவு பாதுகாப்பு மசோதா 2022 அறிமுகம்..!

மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022 இன் வரைவை வெளியிட்டார்.

இந்த வரைவின் முக்கியச் சிறப்பம்சங்களில் ஒன்று டேட்டா மேலாண்மை நிறுவனங்கள் சரியான செக்யூரிட்டி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இல்லையெனில் 250 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் எனப் புதிய மசோதா வரைவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் தரவுகள்

டிஜிட்டல் தரவுகள்

இந்தியாவில் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இதேபோல் மக்களின் தரவுகளும் பொதுத் தளத்தில் அதிகரித்துள்ளதால், இதைச் சரியான முறையில் கையாள வேண்டும் என்பதற்காக டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-ன் வரைவை கொண்டு வரப்பட்டு உள்ளது.

பர்சனல் டேட்டா

பர்சனல் டேட்டா

இந்தியாவில் தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான உரிமை மற்றும் சட்டப்பூர்வமான நோக்கங்களுக்குக் கீழ் பர்சனல் டேட்டா-வை பிராசஸ் செய்ய வேண்டியதன் அவசியத்தையும், அனுமதி கொடுப்பதை அங்கீகரிக்கும் அடிப்படை நோக்கத்திற்காக இந்த டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022 வரைவு கொண்டு வரப்பட்டு உள்ளது

டிஜிட்டல் ரெகுலேட்டர்

டிஜிட்டல் ரெகுலேட்டர்

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022 மூலம் மத்திய அரசு தனிநபர் தரவுகள் மட்டும் அல்லாமல் டிஜிட்டல் சேவைகளைக் கண்காணிக்கும் டிஜிட்டல் ரெகுலேட்டராக Data Protection Board of India என்ற அமைப்பை உருவாக்கவும் இடம் அளிக்கிறது.

டிஜிட்டல் பொருளாதாரம்

டிஜிட்டல் பொருளாதாரம்

இந்தப் புதிய டேட்டா பாதுகாப்பு மசோதா மற்றும் டெலிகாம் மசோதா 2022, புதுப்பிக்கப்பட்ட ஐடி சட்டம் 2000 ஆகிய மூன்றும் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான சட்டரீதியான அடித்தளத்தை அமைக்க முடியும். இதன் மூலம் மக்களின் தனிநபர் தரவுகளைக் கையாளுவதில் தெளிவான பார்வை அரசுக்கும், நிறுவனங்களுக்கும் கிடைக்கும்.

தகவல் பாதுகாப்புச் சட்டம் 2019

தகவல் பாதுகாப்புச் சட்டம் 2019

மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இதற்கு முன்பு தகவல் பாதுகாப்புச் சட்டம் 2019 மசோதாவிற்குப் பொது மக்கள் தரப்பில் இருந்து கருத்து கேட்ட போது கடுமையான எதிர்ப்பும், தவறுகளையும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் 2019ல் அறிமுகம் செய்த மசோதா வரைவை ரத்துச் செய்யப்பட்டது.

81 திருத்தங்கள்

81 திருத்தங்கள்

தகவல் பாதுகாப்புச் சட்டம் 2019 மசோதா டிசம்பர் 11, 2018ல் அறிமுகம் செய்யப்பட்டு, பின்பு நாடாளுமன்றத்தின் இரு இரு அவைகளின் கமிட்டி சமர்ப்பிக்கப்பட்டது. இந்தக் கமிட்டி டிசம்பர் 2021ல் லோக் சபாவில் சமர்ப்பித்தது, இந்த மசோதா சுமார் 81 திருத்தங்கள் உடன் திரும்பப்பெறப்பட்டது. இதனால் இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லோக்சபாவில் இருந்து அஷ்வினி வைஷ்ணவ் மூலம் ரத்துச் செய்யப்பட்டது.

அபராதம்

அபராதம்

தனிநபர் தரவுகள் திருடப்படும் போது நிர்வாகத்திடம் அறிவிக்காமல் ஏமாற்றப்பட்டால் 200 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும். தரவு நம்பகத்தன்மை குறித்துக் கூடுதல் கடமைகளை நிறைவேற்றாவிட்டால் 150 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும். இப்படப் பல தவறுகளுக்கு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022ல் அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+