சீனா: சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் டேட்டிங் செய்யும் தங்கள் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. தி சவுத் சைனா போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின் படி, சீனாவில் செயல்பட்டு வரக்கூடிய ஒரு கேமரா நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு என பிரத்தியேகமாக ஒரு டேட்டிங் தளத்தை உருவாக்கியிருக்கிறது.
இந்த டேட்டிங் தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு உரியவர்களை தேர்வு செய்து அவர்களோடு உறவு முறையில் இருக்கும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறதாம். இன்ஸ்டா360 என்ற நிறுவனம் சீனாவின் சென்சேன் மாகாணத்தில் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு என இன்டர்னல் ஆன்லைன் டேட்டிங் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் தங்களுடைய ஊழியர்கள் தங்களுக்கு பொருத்தமான நபர்களை தேர்வு செய்து டேட்டிங் செய்ய முடியுமாம். இவ்வாறு வெற்றிகரமாக ஒருவரை தேர்வு செய்து டேட்டிங் செய்பவர்களுக்கு இந்த நிறுவனம் கணிசமான தொகையை வழங்குகிறது.
அதாவது டேட்டிங் தொடர்பாக இவர்கள் போடக்கூடிய ஒவ்வொரு பதிவுக்குகும் 750 ரூபாய் வழங்கப்படும். ஒரு வேலை இந்த தளத்தின் வாயிலாக இரண்டு பேருக்கு பிடித்து அவர்கள் டேட்டிங் செய்து குறைந்தது மூன்று மாதங்களாவது ஒன்றாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1100 ரூபாயை இந்த நிறுவனம் வழங்குகிறது.
ஊழியர்கள் தொடர்ந்து இந்த நிறுவனத்திலேயே பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும் அவர்களுடைய மனநலனை கருத்தில் கொண்டும் இப்படி ஒரு ஐடியாவை கொண்டு வந்திருப்பதாக இன்ஸ்டா 360 நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே கிட்டத்தட்ட 500 பேர் இதில் இணைந்து ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே சீன சமூக வலைத்தளங்களில் இந்த நிறுவனத்தின் செயல் குறித்து தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஒரு பயனர் என்னுடைய திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் என் அம்மாவை விட இந்த நிறுவனம் மிக ஆர்வமாக இருக்கிறது என கிண்டலாக பதிவு செய்துள்ளார். பலரும் இப்படி ஒரு நிறுவனத்தில் தங்களுக்கு வேலை கிடைக்கவில்லையே என கூறுகின்றனர்.
சீனாவை பொறுத்தவரை தற்போது திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை கடுமையான சரிவில் உள்ளது. சீன நாட்டின் பொது விவகாரத்துறை வெளியிட்டு இருக்கக்கூடிய தகவலின் படி 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சீனாவில் 40.74 லட்சம் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 50.69 லட்சம் என இருந்தது.
வாழ்க்கை செலவினங்கள் உயர்ந்தது ,பொருளாதார ஸ்திரமற்ற தன்மை போன்றவையே காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் நாட்டில் திருமணங்கள் குறைகிறது என்பதோடு குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைந்து மக்கள் தொகையும் குறைந்துவிடும் என்ற கவலை எழுந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications