பிரேக்கப் செய்ய உதவி.. மாதம் ரூ.2.8 லட்சம் சம்பளம்! 3 முறை பிரேக்கப் ஆகிருக்கா? அப்ப நீங்க தான் ரைட் சாய்ஸ்!

பிரபல டேட்டிங் இணையதளமான "Dating.com" சமீபத்தில் ஒரு விசித்திரமான வேலை வாய்ப்பு விளம்பரத்தை பகிர்ந்தது. அதை தங்கள் அதிகாரப்பூர்வ லிங்க்டின் பக்கத்திலும் வெளியிட்டனர். அந்த வேலை வாய்ப்பு விளம்பரம் வெளியானதிலிருந்து இணையத்தில் தீயைப் பரவி வருகிறது. வேலைவாய்ப்பு விளம்பரத்திற்கு ஏன் இவ்வளவு ஹைப் என்று தானே யோசிக்கிறீர்கள்.. ஏனெனில் அதில் கொடுக்கப்பட்டிருந்த ஜாப் ரோல் "சீஃப் பிரேக்-அப் ஆபீசர்". இந்த ஜாப் ரோலுக்கு என்னென்ன தகுதி வேண்டும்?, எவ்வளவு சம்பளம் வழங்கப்படும்? என்பதையும் அந்த நிறுவனமே கொடுத்திருக்கிறது. இந்தப் பதிவில் அது குறித்து பார்ப்போம்.

நீண்ட காலமாக கோஷ்டிங் என்று சொல்லப்படுகிற காரணமே இன்றி பிரிந்து செல்லும் வழக்கம் காதலர்கள் மத்தியில் அதிகரித்தது. எனவே உறவை முறையாக முடித்துக் கொள்ள சிரமப்படும் காதலர்களுக்காகத்தான் இந்த பணி நியமனம். இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா? இந்த வேலைக்கு வழங்கப்படும் சம்பளம்.

பிரபல ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொடுக்கும் பேக்கேஜை போலவே இந்த ரோலுக்கும் சம்பளம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு பார்ட் டைம் வேலை வாய்ப்பாகும். இந்த ரோலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபருக்கு 3000 டாலர் சம்பளம் கொடுக்கப்படும் என்று டேட்டிங் டாட் காம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 3000 டாலர் என்றால் இந்திய மதிப்பிற்கு 2.8 லட்ச ரூபாய். தற்போது இந்த பணியில் சேர்வதற்கான முதல் நபரை நிறுவனம் தேடிக் கொண்டிருக்கிறது.

பிரேக்கப் செய்ய உதவி.. மாதம் ரூ.2.8 லட்சம் சம்பளம்! 3 முறை பிரேக்கப் ஆகிருக்கா? அப்ப நீங்க தான் ரைட் சாய்ஸ்!

இந்த ரோலுக்கான தகுதியாக நிறுவனம் ஒரு சிலவற்றை குறிப்பிட்டிருக்கிறது. அதில் காதல் பற்றிய ஆழமான புரிதல் இருக்க வேண்டும், மேலும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படுகிற காதல் உணர்வுகளை பற்றிய அறிவு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Also Read

நிறுவனத்தின் விளம்பரத்தில், பிரேக்அப் செய்வதற்கு முன்பு உங்களுடைய நண்பர்கள் உங்களுக்கு மெசேஜ் செய்து ஆலோசனை கேட்கிறார்கள் என்றால், நீங்கள் தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கும் ஜாப் ரோலுக்கு தகுதியுள்ளவர் என்று குறிப்பிட்டுள்ளது. இது போன்ற விசித்திரமான விளம்பரம் வெளியானதிலிருந்து நெட்டிசன்கள் ஆர்வத்துடன் இந்த ரோலுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் தகுதி ஆகியவற்றை தெரிந்து கொண்டு வருகின்றனர்.

பணியில் சேர்ப்பவர் எந்தெந்த வேலையை செய்ய வேண்டும்?: டேட்டிங் டாட் காம் இணையதளத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுடன் தேவைப்பட்டால் கால் பேச வேண்டும். காதலர்கள் இடையே இருக்கும் உறவு எப்படி இருக்கிறது? என்பதை மதிப்பீடு செய்து பிரேக்கப் வரை சென்றால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பிரேக்கப் செயல்முறையை சுமூகமாக செய்து வைப்பதும் இவர்களுடைய பொறுப்பு.

எப்படி பிற வேலைகளுக்கு எக்ஸ்பீரியன்ஸ் தேவையோ? அதேபோல இந்த ரோலுக்கும் எக்ஸ்பீரியன்ஸ் இருக்க வேண்டும் என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜாப் ரோலே கேட்பதற்கு விசித்திரமாக இருக்கிறது. இதற்கு எப்படி எக்ஸ்பீரியன்ஸ் இருக்க முடியும் என்று தானே யோசிக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு 3 முறை பிரேக் அப் ஆகி இருக்க வேண்டும். அதிலிருந்து நீங்கள் மீண்டு வந்திருக்க வேண்டும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களுடைய பிரேக்கப் ஸ்டோரியை எழுதி நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். அதில் உங்களுடைய பிரேக்கப்பில் என்ன நடந்தது?, நீங்கள் எந்த விஷயங்களை எல்லாம் சொல்லி பிரேக் அப் செய்தீர்கள்?, அதை நினைத்து தற்போது ஏன் பெருமைப்படுகிறீர்கள்? இந்த ரோலுக்கு நீங்கள் சரியான நபர் என்று நினைக்கிறீர்களா? என்ற பல விஷயங்களையும் நிறுவனத்திற்கு கூற வேண்டும். அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனத்தின் வேலை வாய்ப்பு விளம்பரம் உண்மையிலேயே பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+