சுவிட்சர்லாந்து நாட்டில் தொடங்கியிருக்கும் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்காக போட்டி போட்டு கொண்டு செயல்படுகின்றன. டாவோஸ் நகரில் 20ஆம் தேதி தொடங்கி இருக்கக்கூடிய இந்த மாநாடு 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதில் இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் , தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் கலந்து கொண்டு பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இந்த 55 ஆவது உச்சி மாநாட்டில் நடப்பாண்டில் இந்தியாவை சேர்ந்த ஆறு மாநிலங்களின் அமைச்சர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆந்திரா, மகாராஷ்டிரா , தெலுங்கானா, தமிழ்நாடு, உத்திர பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் கூட்டாக இணைந்து இந்தியாவிற்கு பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு வருவதில் ஆர்வமாக இருக்கின்றனர். இது தவிர இந்தியாவை சேர்ந்த 100 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் இந்த உலக பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2025 டாவோஸ் உலக பொருளாதார உச்சி மாநாட்டில் இயன்ற அளவு முதலீடுகளை ஈர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாக தொழில் மேம்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டின் தற்போதைய தொழில் முன்னேற்றம் எப்படி இருக்கிறது, தமிழ்நாட்டின் தொழில் தொடங்குவது எவ்வளவு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து நிறுவனங்களுக்கு எடுத்துரைத்து பெருமளவிலான முதலீடுகளை பெற திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு தொழில் துறையை சேர்ந்த அதிகாரிகள் 50 ஆலோசனைக் கூட்டங்களுக்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வரக்கூடிய நிறுவனங்கள் குறித்தும் நிறுவன தலைவர்கள் குறித்தும் விளக்கம் அளிக்கக்கூடிய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு தொழில் துறை செயலாளர் அருண் ராய் தமிழ்நாட்டில் தற்போது செயல்பாட்டில் இருக்கக்கூடிய தொழில்துறை சார்ந்த கொள்கைகள் நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தரக் கூடிய வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தொழில் முதலீட்டில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் உலகின் முன்னணி உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாறி வருவது குறித்தும் The raging bull என்ற பெயரில் ஒரு மஸ்காட்டை கொண்டு பிரத்தியேகமாக பிரச்சாரம் செய்து வருவதாக கூறியுள்ளார்.
ஆந்திரா சார்பில் பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அமராவதி நகரை நோக்கி பல்வேறு நிறுவனங்களையும் கொண்டு வருவது தங்களின் இலக்காக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ரேவந்த் ரெடி தங்கள் மாநிலத்தின் பிரதிநிதிகள் டாவோஸ் மாநாட்டில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை கொண்டு வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே போல கேரளா மாநில பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர். கர்நாடகாவில் அடுத்த மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவதால் அம்மாநில பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications