சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் உலக பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்திர கூட்டம் ஜனவரி 19 முதல் 23 வரை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் கல்வியாளர்கள் என பல துறைகளை சேர்ந்த பல தலைவர்கள், நிபுணர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்டாராக இருக்கும் தமிழ்நாடு அரசு இந்த வரும் கலந்துக்கொள்ளவில்லை, இதனால் மற்ற மாநிலங்கள் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை பெற்றுள்ளதுள்ளது.

இது தவிர இந்தியா அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ள தனி பேவிலானில் பங்கேற்று முதலீட்டை பெற மிகப்பெரிய குழுவை அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. இதுதவிர 10 மாநில அரசுகள் மத்திய அமைச்சர்களுடன் இணைந்து முதலீடு ஈர்க்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
மகாராஷ்டிரா அரசு முதல் நாளிலேயே 19 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 14.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டையும், இதன் மூலம் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடும், கர்நாடகாவும் கலந்துகொள்ளாதது வருத்தமான விஷயமாக இருக்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 21 (புதன்கிழமை) இந்த கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இதை உலகம் முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு விற்கும் வரை 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீத வரி விதிப்பு என்ற அவரது அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா-ஐரோப்பா உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதேவேளையில் வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளத்தை கைப்பற்றியுள்ளது, NATO-வுக்கு எதிராக டிரம்ப் பேசுவது, டிரம்ப்-க்கு நோபல் பரிசு வழங்காத நார்வே நாட்டை விமர்சனம் செய்வது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் உடனான பிரச்சனை, அமெரிக்காவில் நடக்க உள்ள மிட்டர்ம் தேர்தல் என பல விஷயங்களுக்கு மத்தியில் டிரம்ப் இந்த முக்கியமான பொருளாதார கூட்டத்தில் எதைபற்றி பேச போகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

மேலும் டாவோஸ் நகரில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் உலகளவிய நிறுவனங்களிடம் முதலீடு ஈர்க்கும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஆந்திர மாநிலம் தனி பேவிலியனை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசு சார்பில் சென்றுள்ள குழுவில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பிரல்ஹாத் ஜோஷி, ராம் மோகன் நாயுடு ஆகியோர் உள்ளனர். மேலும் இந்தியாவில் இருந்து அசாம், உத்தரபிரதேசம், குஜராத், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா ஆகிய 10 மாநிலங்கள் பங்கேற்றுள்ளன. ஆந்திராவைத் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்தும் இந்தியா பேவிலியனை பயன்படுத்துகிறது.
தமிழ்நாடு அரசு வரும் சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்த முறை டாவோஸ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு கலந்து கொள்ளாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications