சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரம் முழுவதும் தற்போது உலக நாடுகளில் இருந்து அரசியல் தலைவர்களும், வர்த்தக தலைவர்களும் ஒன்றாக கூடியுள்ளனர். 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள உலக பொருளாதார கூட்டத்தில் (WEF) கலந்துக்கொள்ள 130க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதனால் டாவோஸ் நகரத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஹோட்டல் அறைகள், வீடுகளின் வாடகை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் வாடகை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
ரேடியன் ஆல்ப்ஸ் மலைகளில் அமைந்துள்ள டாவோஸ் நகரம், உலக பொருளாதார கூட்ட நடைபெறும் காலத்தில் பல நாட்டு தொழிலதிபர்களும், அரசியல் தலைவர்களும் வரும் காரணத்தால் இதை முதலீட்டு ஈர்க்கும் வாய்ப்பாகவும், வர்த்தக நட்புறவை மேம்படுத்தும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது தமிழ்நாடு அரசு சார்பாக டிஆர்பி ராஜா தலைமையிலான பவர்ஃபுல் அணி டாவோஸ்-க்கு சென்றுள்ளது.

இப்படி இந்தியாவில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் அரசியல் தலைவர்களும், வர்த்தக தலைவர்களும் டாவோஸ் வரும் காரணத்தால், இக்காலக்கட்டத்தில் தங்குவதற்கான விடுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு டிமாண்ட் அதிகரித்து வாடகை விண்ணை முட்டிகிறது. ஜனவரி 20 முதல் 24 வரை நடைபெறவுள்ள WEF கூட்டத்திற்காக ஜனவரி 15 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் ஹோட்டல் புக்கிங் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.
ஹோட்டல்கள் தாண்டி ஏர்பிஎன்பி போன்ற தளங்களில் வாடகைக்கு வீடுகளும் டாவோஸ் நதரில் கிடைக்கின்றன. ஆனால் வாடகையை கேட்டால் தான் நெஞ்சம் பதறுகிறது.
மூன்று அறைகள் கொண்ட ஒரு சொகுசு பெண்ட்ஹவுஸ்-ன் ஒரு நாள் வாடகை 22,426 டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.19 லட்சம்) ஆகும். இதேபோல், இருவர் தங்கும் கேம்பர்வான் வாடகை ஒரு நாளுக்கு 1,526 டாலர் இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1.32 லட்சம் ஆகும்.
ஒரே வீட்டில் பல தரப்பினர் தங்கம் வீடு அதாவது shared apartment வாடகை கூட ஒரு நாளுக்கு ரூ.1.16 லட்சம் ஆக உள்ளது. டாவோஸ் மாநாட்டு மையத்திற்கு அருகிலுள்ள சொகுசு வீடுகளின் வாடகை ஒரு நாளுக்கு ரூ.15 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இதுவே WEF மாநாடு முடிந்த பிறகு அந்த அறையின் வாடகை ஒரு நாளுக்கு வெறும் ரூ.21,000 மட்டுமே என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications