இந்தியாவின் நிழல் உலகத் தாதாவான தாவூத் இப்ராஹிம் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி, உடல் நலக்குறைவு காரணமாகப் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது. இந்தத் தகவலை இந்திய மக்கள் மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் மக்களும் அதிகம் பகிர்ந்தனர்.
இதன் மூலம் இந்தியாவையும், இந்திய மக்களையும் பயமுறுத்திய தாவூத் இப்ராஹிம் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளார். தாவூத் இப்ராஹிம் மரணம் குறித்த செய்தி பொய்யானது எனக் கூறப்பட்டாலும் மக்கள் மத்தியில் தாவூத் குறித்த பேச்சு குறையவில்லை.

சர்வதேச அளவில் தாவூத் இப்ராஹிம் 2வது பெரும் பணக்கார ரவுடி கும்பல்களில் ஒன்று என ஃபோர்ப்ஸ் கூறுகிறது. 2015 ஆம் ஆண்டில், தாவூத் இப்ராஹிமின் நிகரச் சொத்து மதிப்பு 6.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் இன்றைய சொத்து மதிப்பு குறித்து முழுமையான தகவல் தெரியவில்லை.
தாவூத் இப்ராஹிம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் சுமார் 12க்கும் அதிகமான நாடுகளில் தனது வர்த்தகத்தைச் செய்து வந்தாகக் கூறப்படுகிறது. தங்கம், வைரம், போதை பொருள் வரையில் அனைத்தையும் வெளிநாட்டில் இருந்து திருட்டுத் தனமாகக் கொண்டு வந்தார்.
தாவூத் இப்ராஹிம்-க்கு இங்கிலாந்தில் மட்டும் சுமார் 450 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இவர் பல்வேறு நாடுகளில் 50க்கும் மேற்பட்ட சொத்துக்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தாவூத் இப்ராஹிமின் பிஸ்னஸ் சாம்ராஜ்ஜியம் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஜெர்மனி, துருக்கி, பிரான்ஸ், ஸ்பெயின், மொராக்கோ, சைப்ரஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்னாப்பிரிக்கா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.
கொலம்பியாவைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் தான் உலகிலேயே பெரும் பணக்காரர் எனப் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. ன பாப்லோ எஸ்கோபார் 1989 ஆம் ஆண்டில், 9 பில்லியன் டாலர் உடன் பெரும் பணக்காரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் தங்க கடத்தல், போதை பொருட்கள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட், படம் தயாரிப்பு, தொழிலதிபர்கள் துவங்கி பாலிவுட், அரசியல் வட்டம் வரையில் பெரிய நெட்வொர்க் வைத்திருந்தார் தாவூத். 1993ல் மும்பையில் நடந்த பெரும் குண்டு வெடிப்பு மூலம் சுமார் 257 மரணம் அடைந்தனர், இது தொடர்பாக அமெரிக்கா இவரை முக்கியக் குற்றவாளி பட்டியலில் இணைத்து இவர் தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை விதித்தது.
1986 இந்தியாவை விட்டுத் தப்பித்துத் துபாயில் தங்கிக்கொண்டு இந்தியாவில் அனைத்து விதமான நாச வேலைகளையும் செய்தார் தாவூத் இப்ராஹிம். இதன் பின்பு சில ஆண்டுகளிலேயே பாகிஸ்தானுக்குச் சென்று இதுநாள் வரையில் அங்கேயே ரகசியமாக வாழ்ந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications