நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆரம்பம் முதல் தீவிர அரசியலில் இருக்கும் காரணத்தால் அவருடைய மூத்த சகோதரர் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் போல் வர்த்தக துறையில் இல்லை. ஆனால் தயாநிதி மாறனின் வாரிசுகள் இளம் வயதிலேயே ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.
இதன் மூலம் தயாநிதி மாறன் வாரிசுகள் கரண், திவ்யா வர்த்தக துறைக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளனர். இவர்கள் துவங்கிய வர்த்தகம் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஒரு டிரெண்டியான வர்த்தகமாகும்.

நிவேதிதா அரவிந்த் (25 வயது), திவ்யா தயாநிதி மாறன் (22 வயது) மற்றும் கரண் தயாநிதி மாறன் (19 வயது) ஆகியோர் இணைந்து உருவாக்கிய பிராண்ட் தான் Kkix. இந்த நிறுவனம் சென்னையை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாகும், Kkix ஒரு ஸ்னீக்கர் ஷூ கஸ்டமைஸ் சேவையை வழங்குகிறது.
கரண் தயாநிதி மாறன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆக்கவுன்டிங் மற்றும் பைனான்ஸ் பிரிவில் ஜூன் 2024ல் பட்டம் பெற்றார். கல்லூரியை முடிக்கும் முன்பே Spark Capital Advisors, Unifi Capital, Boston Consulting Group (BCG) ஆகியவற்றில் இன்டர்ன்ஷிப் முடித்துள்ளார். இதை தொடர்ந்து MUTIS Ethical Investment Fund நிறுவனத்தில் எனர்ஜி பிரிவின் தலைவராக 11 மாதம் பணியாற்றியுள்ளார்.

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் ஸ்னீக்கர் ஷூக்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் மற்றும் ஆர்வம் உள்ளது. இந்தியாவை ஒப்பிடுகையில் வெளிநாடுகளில் ஸ்னீக்கர் ஷூ கலாச்சாரம் அதிகமாக உள்ளது. Kkix நிறுவனம் சென்னையில் இருந்துக்கொண்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு யாரிடமும் இல்லாத ஒரு கஸ்டமைஸ் ஸ்னீக்கர் ஷூவை வழங்குகிறது.
நிவேதிதா, திவ்யா மற்றும் கரண் ஆகியோர் ஸ்னீக்கர் ஷூ விரும்பிகள் என்பதாலும், இளம் தலைமுறையினர் மத்தியில் இருக்கும் டிரெண்ட்-ஐ உணர்ந்து Kkix நிறுவனத்தை சென்னையில் துவங்கி தற்போது இந்திய அளவில் சேவை அளிக்க உள்ளனர்.

இதற்காக Kkix நிறுவனம் சுமார் 50 தென்னிந்திய கலைஞர்கள் கொண்ட குழுவை இணைத்துள்ளது, வாடிக்கையாளர்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக, டிஜிட்டல் டிசைனர்கள் ஷூ வடிவமைப்புகளின் மாக்-அப்களை உருவாக்கி அதன் மூலம் ஒப்புதல் பெற்று கஸ்டமைஸ் ஸ்னீக்கர் ஷூ தயாரிக்கின்றனர்.
இதன் மூலம் ஒரு ஆர்டர் பெற்று டெலிவரி செய்ய இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரையிலான காலம் தேவைப்படும் என தெரிகிறது. இந்த நிறுவனத்தின் டார்கெட் ஆடியன்ஸ் 18 முதல் 30 வயதுடையவர்கள் மட்டுமே, K-kix கஸ்டமைஸ் ஸ்னீக்கர் ஷூ விலை 17,999 ரூபாயில் துவங்குகிறது, சில ஆர்டர்களின் மதிப்பு 30,000 ரூபாய் வரை இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications