இந்தியாவில் தொழில் உலகம் காலப்போக்கிற்கு ஏற்ப மாறி கொண்டே வருகிறது. ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமாக விற்பனை ஆகி வந்தன. ஆனால் தற்போது அவற்றை நாம் எங்குமே காண முடிவதில்லை. அப்படி 90ஸ் கிட்ஸ்களின் நினைவுகளில் நீங்காத இடம் பிடித்துள்ள இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றிருந்த நிறுவனங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
ஹெச்எம்டி வாட்ச்: 1960 களிலிருந்து 1990கள் வரை இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு கைக்கடிகார பிராண்ட் என்றால் அது ஹெச்எம்டி தான். இந்த வாட்ச் அணிந்திருந்தாலே ஒரு கௌரவம் என்ற நிலை அப்போது காணப்பட்டது. பின்னாளில் டைட்டன் , கேஷியோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் போட்டியிடத் தொடங்கியதால் ஹெச்எம்டி இவற்றுடன் போட்டி போட முடியாமல் கடந்த 2016 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

பிபிஎல் எலக்ட்ரானிக்ஸ்: இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் பிபிஎல் நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் தான் அலங்கரித்திருந்தன. 1980 களில் இருந்து 2000 வரை இந்தியர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வந்த ஒரு டிவி பிராண்ட் பிபிஎல் தான். ஆனால் பின்னாளில் ஸ்மார்ட் டிவிகளின் வருகையால் இந்நிறுவனத்தின் தொலைக்காட்சிகளுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்தது. தொடர்ந்து இந்த நிறுவனம் சந்தையில் இருந்தாலும் முன்பை போல பெரிய அளவில் விற்பனையோ அல்லது சந்தை ஆதிக்கத்தையோ கொண்டிருக்கவில்லை .
அம்பாசிடர் கார்கள்: 1960 களிலிருந்து 1980கள் வரை இந்திய சாலைகளில் நம் அம்பாசிடர் கார்களை மட்டுமே காண முடியும். அரசியல்வாதிகள் தொடங்கி டாக்ஸி ஓட்டுநர்கள் வரை அம்பாசிடர் கார்கள் தான் காணும் இடமெல்லாம் நிறைந்திருக்கும். பல்வேறு நிறுவனங்கள் இந்திய சந்தைக்கு வருகை தந்தன, இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களும் கார் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கின. எனவே அம்பாசிடர் கார்களுக்கான மோகம் குறைந்துவிட்டது. 2017 ஆம் ஆண்டு இந்த பிராண்ட் பியூகோட் என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
வீடியோகான்: இந்தியாவில் கன்சியூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய ஒரு நிறுவனம்தான் வீடியோ கான். 1990 களிலிருந்து 2000 வரை தொலைக்காட்சி ,குளிர்சாதன பெட்டி மற்றும் டிடிஹெச் சேவைகள் என வீடியோ கான் தான் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் இந்த நிறுவனம் சரியாக நிர்வாகம் செய்யப்படாததால் கடன்களில் சிக்கி தன்னுடைய வாடிக்கையாளர்களையும் இழந்து தொழிலிலும் நஷ்டம் அடைந்தது. 2018 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் திவாலான நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.
மகாராஜா அப்ளையன்ஸ்: 1990களில் இருந்து 2000 வரையிலான காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் மகாராஜா பிராண்ட் மிக்சி தான் நாம் பயன்படுத்து இருப்போம். ஆனால் பின்னர் வந்த பல்வேறு பிராண்டுகளிடம் போட்டி போட முடியாமல் இந்த நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களை இழந்துவிட்டது. தற்போது சில இடங்களில் தொடர்ந்து மகாராஜா நிறுவனத்தின் பொருட்கள் விற்பனையானாலும் முன்பிருந்த வரவேற்பு தற்போது இல்லை.
ரஸ்னா: 1980 களிலிருந்து 2000 ஆண்டு வரையிலான காலகட்டம் வரை ரஸ்னாவை அருந்தாத மக்களே இருக்க முடியாது. 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிடித்தமான ஒரு பானமாக ரஸ்னா இருந்து வந்தது. பின்னர் வந்த பல்வேறு நிறுவனங்களின் போட்டி காரணமாக ரஸ்னாவுக்கான மோகம் குறைந்து விட்டது. இருந்தாலும் தற்போதும் இது தொடர்ந்து சந்தையில் இயங்கி தான் வருகிறது.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications