உலகிலேயே விலைவாசி மிகுந்த நகரங்களின் பட்டியலில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. மெர்சர் (Mercer) என்ற நிறுவனம் காஸ்ட் ஆஃப் லிவ்விங் ரிப்போர்ட் 2024(cost of living report 2024) என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் எந்த நகரங்களில் காஸ்ட் ஆஃப் லிவிங் அதாவது வாழ்வதற்கான செலவு மிக அதிகமாக உள்ளது என்பது தொடர்பான ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அடுத்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நகரங்கள் கணிசமான இடங்களை கைப்பற்றியுள்ளன. இந்த பட்டியலில் நியூயார்க் ஒரு இடத்திற்கு கீழே சென்று ஏழாவது இடம் பிடித்துள்ளது. ஒன்பதாவது இடத்தில் இருந்த லண்டன் தற்போது எட்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
வீட்டு மனைகளின் விலை உயர்வு மற்றும் பணவீக்க விகிதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டு இருப்பதாக மெர்சர் தெரிவித்துள்ளது. தங்களது சொந்த நாடுகளில் இருந்து வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக வெளிநாடுகளுக்கு சென்று தங்கி இருப்பவர்களுக்கான பட்டியல் இது என்றும் மெர்சர் தெரிவித்துள்ளது.
ஒரு நகரில் காஸ்ட் ஆஃப் லிவிங் உயரும் போது வெளிநாடுகளில் இருந்து அங்கே குடிபெயர்ப்பவர்கள் மேலும் சிரமங்களை எதிர்கொள்ள இருக்கும் என மெர்சர் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். செலவினங்கள் அதிகரிக்கும் போது இதுபோல வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது செலவினங்களை குறைக்க வேண்டி இருக்கும் அதுமட்டுமின்றி சிலருக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட கடினமான சூழல்கள் ஏற்படலாம் என்கிறார்.
இந்த எக்ஸ்பென்சிவ் நகரங்கள் பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த ஏழு நகரங்கள் இடம் பிடித்துள்ளன. பசிபிக் பிராந்தியத்தில் காஸ்ட்லியான நகரம் என்ற பெயரை சிட்னி பெற்றிருக்கிறது. இந்தியாவின் மும்பை நகரமும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது இது 136 வது இடத்தில் உள்ளது.
வீட்டுமனை, போக்குவரத்து செலவு, உணவு, துணிமணி மற்றும் பிற அடிப்படை பொருட்கள் ஆகியவற்றை கிட்டத்தட்ட 226 நகரங்களிலும் எடுத்து ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் மெர்சர் இந்த பட்டியலை வழங்கியுள்ளது. இதன்படி இந்த நகரங்கள் அனைத்தும் மிகவும் எக்ஸ்பென்சிவான நகரங்களாக உள்ளன.
ஹாங்காங் ,சிங்கப்பூர், ஜூரிச், ஜெனீவா, பேசல், பெர்ன் , நியூயார்க் லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், துபாய். டெல் அவிவ்,ஷாங்காய் பாரீஸ் ஆகிய நகரங்களும் கூட இந்த முதல் 30 இடங்களுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications