அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வந்து வேலை செய்வதை கட்டுப்படுத்தும் நோக்கில் விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது . குறிப்பாக இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தக்கூடிய ஹெச்1பி விசாவில் நாள்தோறும் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது.
இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கு அமெரிக்காவை தான் சார்ந்து இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. அமெரிக்காவுக்கு மாற்றாக சில நாடுகளும் இருக்கின்றன அங்கே நல்ல சம்பளத்தோடு வேலை கிடைக்கிறது . இந்தியர்களைப் போன்ற திறன்மிகு ஊழியர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கக் கூடிய நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளில் எல்லாம் நல்ல சம்பளமும் நல்ல வேலை வாய்ப்பும் இந்தியர்களுக்கு கொட்டி கிடக்கின்றன. அவை எந்தெந்த நாடுகள், அமெரிக்காவுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்காதவர்கள் வேறு எந்த நாடுகளுக்கு செல்லலாம் என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

1.கனடா : அமெரிக்காவுக்கு மாற்றாக இருக்கக்கூடிய முக்கியமான ஒரு நாடாக கனடா இருக்கிறது. திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை கனடா அரசு federal skilled worker program மூலம் விசா வழங்கி வேலைவாய்ப்பு பெற உதவுகிறது. குறிப்பாக ஐடி துறையில் கனடாவில் சிறந்த வேலை வாய்ப்புகள் இருக்கின்றன . இவ்வாறு வரக்கூடிய திறன் மிக வெளிநாட்டவர்களுக்கு கனடாவில் எளிமையாக நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதால் அமெரிக்காவுக்கு மாற்றான ஒரு சிறந்த தேர்வாக கனடா இருக்கும்.
2.ஜெர்மனி: ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார பவர்ஹவுஸ் என அழைக்கப்படுகிறது ஜெர்மனி . உற்பத்தி துறை மற்றும் பொறியியல் சார்ந்த துறைகளில் இயங்கக்கூடிய நிபுணர்களுக்கு எல்லாம் ஜெர்மனி மிகச் சிறந்த வாய்ப்பை பெற்றுத் தருகிறது. இங்கே Job Seeker Visa வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டவர்கள் இந்த விசாவை பெற்ற ஜெர்மனிக்கு சென்று ஆறு மாதம் தங்கியிருந்து வேலை தேடலாம். வேலை கிடைத்துவிட்டால் அதனை வேலை செய்வதற்கான work permit-ஆக மாற்றிக்கொண்டு தங்கி வேலை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஜெர்மனியில் தொடர்ந்து தங்கி வேலை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய ப்ளூ கார்ட் திட்டம் என்ற ஒரு விசா திட்டத்தையும் ஜெர்மனி அமல்படுத்தியிருக்கிறது.
3. சிங்கப்பூர்: ஆசிய நாடுகளில் சிறந்த வேலை வாய்ப்பு தரக்கூடிய ஒரு நாடாக சிங்கப்பூர் இருக்கிறது. திறன்மிகு ஊழியர்கள் எம்பிளாய்மென்ட் பாஸ் விண்ணப்பம் செய்து ஐடி , பேங்கிங் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுகளில் சிங்கப்பூரில் வேலைக்கு சேரலாம். இங்கே அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் .
4. ஐக்கிய அரபு அமீரகம்: இந்தியர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரக்கூடிய ஒரு நாடாக இருக்கிறது. ஐடி, சுகாதாரம் கட்டுமானம் , ஹாஸ்பிடாலிட்டி என பல துறைகளிலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இங்கே வருமான வருமான வரி செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பதால் இந்தியர்களின் விருப்பமான தேர்வாக தொடர்ந்து நீடிக்கிறது.
5. ஆஸ்திரேலியா : தரமான வாழ்க்கை மற்றும் சிறந்த பணி சூழ்நிலை கொண்ட ஒரு நாடாக தொடர்ந்து தக்க வைத்திருக்கிறது. General Skilled Migration program என்ற திட்டத்தின் கீழ் திறன்மிகு வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்று வேலை செய்ய முடியும் . ஐடி ,பொறியியல், சுகாதாரம் என பல்வேறு துறைகளிலும் திறன்மிகு வெளிநாட்டவர்களுக்கு இங்கு வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications