சம்பளம் திடீரென உயர்ந்தால் யாருக்குத் தான் பிடிக்காது, அந்த வகையில் வங்கி ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance - DA) மே, ஜூன், ஜூலை 2024 மாதங்களுக்கு 15.97% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஜூன் 10, 2024 அன்று வெளியிட்ட அறிக்கையில், 12வது இருதரப்பு உடன்பாட்டின் விதி 13 மற்றும் மார்ச் 8, 2024 தேதியிட்ட கூட்டுக் குறிப்பு விதி 2 (i) ஆகியவற்றின் கீழ், வங்கி தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மே, ஜூன் மற்றும் ஜூலை 2024 மாதங்களுக்கான அகவிலைப்படி விகிதம் சம்பளத்தில் 15.97% ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு: மார்ச் 2024 இல், பொதுத் துறை வங்கிகளின் ஊழியர்களுக்கு 17% சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இந்த சம்பள உயர்வு 9வது கூட்டுக் குறிப்பு (Officers' Wage Revision) இன் படி, சம்பள உயர்வின் மூலம் பொதுத் துறை வங்கிகளின் செலவுகளில் ரூ.8,284 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
ஐந்து நாள் வேலை வாரம்: வாரம் ஐந்து நாள் வேலை என்பது வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. மார்ச் 2024 இல் வெளியிடப்பட்ட கூட்டுக் குறிப்பின்படி, "அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அங்கீகரிக்கிறது, ஆனால் இதற்கான அரசின் அறிவிப்பு வர வேண்டும். இதனுடன் திருத்தப்பட்ட வேலை நேரம் அரசின் அறிவிப்புக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஐந்து நாள் வேலை வாரத்தை அமல்படுத்துவதற்கான அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை வங்கி சங்கங்கள் விரைவில் சமர்ப்பிக்க உள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன், வங்கிகளில் வாரம் ஐந்து நாள் வேலை நடைமுறைக்கு வரும்.
இந்த புதிய ஒப்பந்தம் வங்கி ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தியாகும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் குறைக்கப்பட்ட வேலை நேரம் ஆகியவை பணியாளர் பணிச் சூழலை மேம்படுத்தும் மற்றும் வங்கித் துறையில் திறமையானவர்களை ஈர்க்க உதவும்.
அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? புதிய DA கணக்கீடு முறை குறித்த விளக்கம்:
அகவிலைப்படி உயர்வுக்கான காரணத்தை விளக்கும் இந்திய வங்கிகள் சங்கம், மார்ச் 2024 காலாண்டின், தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (Consumer Price Index) அளவு, ஜனவரி 2024 - 138.9, பிப்ரவரி 2024 - 139.2, மார்ச் 2024 - 138.9 ஆக உள்ளது.
இந்த 3 மாதத்திற்கான சராசரி நுகர்வோர் விலைக் குறியீடு 139 ஆகும். அதன்படி, 123.03 புள்ளிகளுக்கு மேலான புள்ளிகள் எண்ணிக்கை 15.97 (139-123.03) ஆகும். இதில் 123.03 என்பது அகில இந்திய நுகர்வோர் விலைப்படி குறியீடு தொழில்துறை தொழிலாளர்களுக்கான காலாண்டு சராசரி அடிப்படை அளவாகும்.
இதன் அடிப்படையில் கடைசி சராசரி காலாண்டு நுகர்வோர் விலைப்படி குறியீடு 138.76 ஆக இருந்தது. எனவே, மே, ஜூன் மற்றும் ஜூலை 2024 க்கு 0.24 புள்ளிகள் அதிகரிப்பு உள்ளது. முன்னாள் வங்கி ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான அகவிலைப்படி நிவாரணம், மேற்கூறிய கணக்கீடு முறையின் அடிப்படையில் கணக்கிடப்படும்.


Click it and Unblock the Notifications