மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ( DA ) மற்றும் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் ( DR ) 4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மார்ச் 24, 2023 அன்று அறிவித்தார்.
இந்த புதிய அறிவிப்பு மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அளவு 42 சதவீதமாக உயர்த்தப்படும். இதன் மூலம் சுமார் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

மேலும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் இப்புதிய அறிவிப்பின் படி ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தின் கூடுதல் தவணையை 01.01.2023 முதல் வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது.

அகவிலைப்படி தற்போது அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் தற்போது 38 சதவீதமாக உள்ளது, இதை 4 சதவீதம் உயர்த்துவதன் மூலம் 42 சதவீதமாக வழங்கப்படுகிறது. இந்த அகவிலைபடி விலைவாசி உயர்வை ஈடுகட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications