உங்களிடம் டெபிட் கார்டு இருக்கா..? ஏடிஎம்-ல் பயன்படுத்தும் முன் இதை படிங்க..!!

இந்தியா முழுவதும் யுபிஐ பயன்பாடு அதிகரித்திருக்கும் வேளையில், மக்கள் கையில் பணம் புழங்குவது வெகுவாக குறைந்துள்ளது. இதேவேளையில் யுபிஐ மூலம் ஒரு நாளுக்கு 1 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை எளிதாக பேமெண்ட் செய்ய முடியும் காரணத்தால் டெபிட் கார்டு பயன்படுத்துவதும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் ஏடிஎம் சேவையை அளிக்கும் நிறுவனங்கள், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்கும் போது வசூலிக்கப்படும் கட்டணத்தை (interchange fee) உயர்த்த வேண்டும் என ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (NPCI) அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உங்களிடம் டெபிட் கார்டு இருக்கா..? ஏடிஎம்-ல் பயன்படுத்தும் முன் இதை படிங்க..!!

தற்போது ஏடிஎம் தொழில் துறை கூட்டமைப்பு (CATMI) ஆர்பிஐ மற்றும் என்சிபிஐ அமைப்புகளிடம் கொடுத்துள்ள கோரிக்கைகளின் படி இந்த கட்டணத்தை அதிகபட்சமாக ரூ.23 ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. இந்த கட்டண உயர்வின் மூலம் ஏடிஎம் சேவையை அளிக்கும் நிறுவனங்கள் தனது வர்த்தக விரிவாக்கத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஏடிஎம்-ல் இருந்து பணம் வித்டிரா செய்யப்படும் சேவைக்கான கட்டணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது; இந்த நிலையில் தற்போது கட்டணத்தை உயர்த்துவதற்கு ஆர்பிஐ நாடியபோது, ஆர்பிஐ எங்களின் கோரிக்கையை ஏற்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் CATMI அமைப்பு இக்கட்டணத்தை ரூ.21 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம், ஆனால் சில ஏடிஎம் உற்பத்தியாளர்கள் இதை ரூ.23 ஆக உயர்த்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர் என்று ஏடிஎம் உற்பத்தியாளர் நிறுவனமான ஏஜிஎஸ் டிரான்ஸாக்ட் டெக்னாலஜிஸின் நிர்வாக இயக்குநர் ஸ்டான்லி ஜான்சன் தெரிவித்தார்.

ஏடிஎம் வித்டிராவல் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆர்பிஐ இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நிதி சந்தையை யுபிஐ ஆட்சி செய்யும் வேளையில் ஏடிஎம் சார்ந்திருக்கும் நிலை குறைந்து வருகிறது, இதனால் ஆர்பிஐ முடிவு என்னவாக இருக்கும் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.


2021 ஆம் ஆண்டில், ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.15 இல் இருந்து ரூ.17 ஆக உயர்த்தப்பட்டது. ஏடிஎம் கட்டணம் என்பது, வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும் வங்கிக்கு (acquiring bank) டெபிட் கார்டு வழங்கிய வங்கி (issuing bank) செலுத்த வேண்டிய கட்டணமாகும்.

மேலும், வாடிக்கையாளரிடம் வசூலிக்கக்கூடிய கட்டணத்தின் அதிகபட்ச வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20 இல் இருந்து ரூ.21 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களில், வங்கிகள் தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்குக் குறைந்தது ஐந்து இலவச பரிவர்த்தனைகளை வழங்குகின்றன, அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் மூன்று இலவச பரிவர்த்தனைகள் வழங்கப்படுகின்றன.

இந்த இலவச முறையைத் தாண்டி பயன்படுத்தும் போது தான் இந்த கட்டணம் வசூலிக்கப்படும். 17 ரூபாயாக இருக்கும் கட்டணத்தை 21 ரூபாயாக உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில் அதிகபட்ச வரம்பின் அளவு குறைந்தது 24 அல்லது 25 ரூபாய் என நிர்ணயம் செய்ய வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+