Diageo: உலகின் மிகப்பெரிய மதுபான நிறுவனம்.. முதல் முறையாக பெண் சிஇஓ நியமனம் - debra crew!

உலகின் பிரபலமான ஸ்காட்ச் விஸ்கி, ஓட்கா, ஜின், ரம், கனடியன் விஸ்கி, டெக்யுலா என 200க்கும் மேற்பட்ட மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமான டியாஜியோ-வில் முதல் பெண் தலைமைச் செயல் அதிகாரியாக(CEO) டெப்ரா க்ரூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த டெப்ரா க்ரூ? இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிர்வகிக்க, அதுவும் ஆண்கள் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்தும் மதுபான வர்த்தகத்தில் பெண் ஒருவரை நியமிக்கும் Diageo நிர்வாக முடிவுக்கு என்ன காரணம்..?

 யார் இந்த டெப்ரா க்ரூ!

யார் இந்த டெப்ரா க்ரூ!

டெப்ரா க்ரூ டிசம்பர் 20, 1970 இல் அமெரிக்காவின், Honolulu வில் பிறந்தார், கொலராடோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும், சிகாகோ பல்கலைக்கழக பூத் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பட்டப்படிப்பை முடித்தார்.

 அமெரிக்க புலனாய்வு அதிகாரி!

அமெரிக்க புலனாய்வு அதிகாரி!

இவரின் பணிகள் மற்றும் பதவிகளும் அனைவரும் வியக்கும் வண்ணம் உள்ளது. ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறைகளில் பெரிய பதவிகளை வகித்து வந்துள்ளார். இவர் ஒரு முன்னாள் ராணுவ புலனாய்வு அதிகாரியாக இருந்துள்ளார்.

  ரெனால்ட்ஸ்

ரெனால்ட்ஸ்

அதன்பின் புகையிலை நிறுவனமான ரெனால்ட்ஸ் அமெரிக்கன் COO மற்றும் CEO பதவிகளை வகித்துள்ளார். க்ரூ முன்பு பெப்சி, கிராஃப்ட் ஃபுட்ஸ், Nestle மற்றும் மார்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணிபுரிந்துள்ளார்.

 Fortune 50 இல் இடம் பிடித்தவர்!

Fortune 50 இல் இடம் பிடித்தவர்!

டெப்ரா க்ரூ ஃபார்ச்சூனின் நாளிதழில் வர்த்தக துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க 50 பெண்களின் பட்டியலில் பல முறை இடம் பெற்றுள்ளார்.

 டியாஜியோவின் டெப்ரா க்ரூ பயணம்!

டியாஜியோவின் டெப்ரா க்ரூ பயணம்!

டெப்ரா க்ரூ 2020 ஆம் ஆண்டு முதல் Diageo-வின் மிகப்பெரிய சந்தையான வட அமெரிக்காவில் வர்த்தக தலைவராகவும், Global Supply இன் தலைவராக இருந்துள்ளார். அதற்கு முன் டியாஜியோவில் 2019 ஆம் ஆண்டு non-executive director ஆக பணிபுரிந்துள்ளார்.

 புதிய CEO பொறுப்பு

புதிய CEO பொறுப்பு

வருகின்ற ஜூலை 1 முதல் அவர் டியாஜியோவின் புதிய CEO ஆக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இந்தப் பதவியில் இவான் மெனஸ் இருந்துள்ளார். இவர் 2012 ஆம் ஆண்டு முதல் டியாஜியோவின் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

 டியாஜியோ!

டியாஜியோ!

டியாஜியோ ஸ்பிரிட்ஸ் மற்றும் பீர் போன்ற மதுபானங்களை தயாரிக்கும் ஒரு முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமாகும். அதன் தயாரிப்பில் பிரபல சரக்கு பிராண்டுகளான ஜானி வாக்கர், கிரவுன் ராயல், ஜே&பி மற்றும் புகேனனின் விஸ்கிகள், ஸ்மிர்னாஃப், சிரோக் மற்றும் கெட்டல் ஒன் ஓட்காக்கள், கேப்டன் மோர்கன், பெய்லிஸ், டான் ஜூலியோ, டான்குரே மற்றும் கின்னஸ் ஆகியவை அடங்கும்.

  180 நாடுகளில் வர்த்தகம்

180 நாடுகளில் வர்த்தகம்

இதன் தயாரிப்புகள் உலகின் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும் இந்நிறுவனம் நிறுவனம் லண்டன் பங்குச் சந்தை (DGE) மற்றும் நியூயார்க் பங்குச் சந்தை (DEO) ஆகிய இரண்டிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+