சென்னை: ஆதார் கார்டில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கின்றன. அதன் பிறகு ஆதாரில் எந்த அப்டேட் செய்தாலும் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
நமக்கான அடையாள ஆவணமாக ஆதாரை நாம் பல இடங்களில் பயன்படுத்துகிறோம். நாம் வீடு மாறினாலோ அல்லது ஊர் மாறினாலோ ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்து கொள்ள வேண்டும். அதே போல நம்முடைய அனைத்து ஆவணங்களிலும் , ஆதாரிலும் நம்முடைய பெயர் ஒரே மாதிரி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவற்றுக்கு ஏற்றவாரு நாம் மாற்றங்களை செய்து கொள்ளும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகிறது.

அது மட்டுமில்லாமல் மக்கள் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை புகைப்படம் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என கூறுகிறது. ஆதார் கார்டில் இருக்கும் நம்முடைய கருவிழி ,கைரேகை, மொபைல் நம்பர் அல்லது புகைப்படம் ஆகியவற்றை நாம் இ சேவை மையங்களுக்கு சென்று மட்டுமே மாற்ற முடியும். அதற்கு நாம் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் பெயர் , முகவரி ஆகியவற்றை நாம் நம் வீட்டில் இருந்து செய்து கொள்ளலாம்.
இதில் பெயர், முகவரி மாற்றங்கள் மக்கள் ஆதார் இணையதளத்தில் இலவசமாகவே செய்து கொள்ள முடியும். மக்கள் தங்களுடைய விவரங்களை ஆன்லைனில் இலவசமாகவே புதுப்பித்துக் கொள்ள வழங்கப்பட்ட காலகேடு டிசம்பர் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது . டிசம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு மக்கள் தங்கள் ஆதார் கார்டில் எந்த ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றாலும் அதற்கு கட்டணம் செலுத்தி ஆக வேண்டும்.
அதாவது இத்தனை காலம் இலவசமாக செய்து வந்த மாற்றங்களுக்கு டிசம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனித்துவ அடையாள ஆணையம் இவ்வாறு மக்கள் தங்களுடைய விவரங்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்வதற்கு செப்டம்பர் 14ஆம் தேதியை கடைசி நாளாக நியமனம் அறிவித்திருந்தது. பின்னர் அது நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 14 வரை மக்கள் இலவசமாக தகவல்களை அப்டேட் செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.
மக்கள் https://myaadhaar.uidai.gov.in/ இணையதளத்திற்கு சென்று தங்களின் முகவரி மற்றும் பெயர் ஆகியவற்றை சரிபார்த்து கொள்ளலாம். ஒருவேளை அவற்றை மாற்ற வேண்டுமெனில் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் செய்தால் இலவசமாகவும் அதன் பின்னர் ஒவ்வொரு முறை அப்டேட் செய்யும்போது 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆதாரில் இந்த மாற்றங்களை கொண்டு வர வாக்காளர் அடையாள அட்டை ,இருப்பிட சான்றிதழ் ,பாஸ்போர்ட் அல்லது வங்கி பாஸ்புக் போன்ற ஆவணங்களை பயன்படுத்தலாம்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications