இந்தியாவில் கார் மற்றும் பைக் விற்பனை இந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக இருந்த நிலையில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டு புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காகப் புதிய கார்களைப் பல தரப்பட்ட விலைகளில் அறிமுகம் செய்தது.
எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு எஸ்யூவி கார்களுக்கான டிமாண்ட், விருப்பம் அதிகமாக இருந்தது, இது ஆட்டோமொபைல் சந்தையில் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் டிசம்பர் மாதம் இயர் எண்ட் டிஸ்கவுன்ட்-ஐ பெரும்பாலான நிறுவனங்கள் அறிவித்த நிலையில் இந்த மாதம் கார் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இந்த டிசம்பர் மாத தள்ளுபடி மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது, இதற்கு முக்கியக் காரணமும் உண்டு. பொதுவாக ஒவ்வொரு வருடமும் அறிவிக்கப்படும் சாதாரண தள்ளுபடி விற்பனையைத் தாண்டி 2023 ஜனவரி மாதம் முதல் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது கார்களின் விலையை அதிகரிக்க உள்ளது.
மாசு உமிழ்வு விதிமுறை
இதைத் தொடர்ந்து மத்திய அரசு கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக விற்பனை ஆகாமல் எஞ்சியிருக்கும் கார்களை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் அதிகளவிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கார் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
4வது பெரிய சந்தை
உலகிலேயே 4வது பெரிய ஆட்டோமொபைல் சந்தை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவில் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையில் திரட்டப்பட்ட தகவல் படி இந்த மாதம் மொத்த விற்பனை 400000 ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
4 லட்சம் கார்கள்
இதுவரையில் இந்திய வரலாற்றில் டிசம்பர் மாதம் விற்பனையில் அதிகப்படியான கார்களை விற்பனை செய்தது 2018 டிசம்பர் தான், இந்த மாதத்தில் ரீடைல் விற்பனையில் சுமார் 3,82,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டது தான் சாதனை அளவாக இருந்தது, தற்போது டிசம்பர் 2022ல் 4 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்படுகிறது என்பது வியக்க வைக்கும் விஷயமாக உள்ளது.
ஏப்ரல் 1 முதல்
ஏப்ரல் 1 முதல் Real Driving Emission விதிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது, இதனால் தற்போது நிலுவையில் உள்ள கார்கள் அனைத்தையும் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஆட்டோமொபைல் டீலர்களும், ஆட்டோமொபைல் நிறுவனங்களும்.
எஸ்யூவி கார்கள்
2022 டிசம்பர் மாதம் விற்பனை செய்யப்பட்ட 4 லட்சம் கார்களில் எஸ்யூவி கார்கள் விற்பனை தான் அதிகமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.
கிராண்ட் விட்டாரா
இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் சமீபத்தில் எஸ்யூவி கார் அறிமுகம் செய்த அனைத்து பிராண்டும் அதிகப்படியான விற்பனையைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் மாருதி சுசூகி அறிமுகம் செய்த கிராண்ட் விட்டாரா மிகப்பெரிய விற்பனை மற்றும் வரவேற்பை பெற்றுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications