கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை எவ்வளவு திட்டமிட்டு முதலீடு செய்து பல மடங்கு பெருக்கினாலும் அதை முறையாக நிர்வாகம் செய்வது, நம் குடும்பத்திற்குக் கொண்டு சேர்த்தால் தான் அது முழுமை அடையும்.
உதாரணமாக லைப் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் போது பெரிய தொகையாக இருந்தாலும் சரி, சிறிய தொகையாக இருந்தாலும் சரி, அது பாலிசிதாரர் மரணத்திற்குப் பின்பு சரியான நபருக்கு சேர்ந்தால் மட்டுமே அது முழுமை அடையும்.

இதை உறுதி செய்யவது தான் நாமினி, அனைத்து நீண்ட காலத் திட்டத்திற்கும், வங்கி கணக்குகளில் இருந்து பங்குச்சந்தை முதலீடுகள் வரையில் நாமினி நியமிப்பத்தைக் கட்டாயமாக்கியுள்ளது ஆர்பிஐ, செபி அமைப்புகள்.
இதன் வாயிலாக வருகிற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து மியூச்சவல் பண்ட் முதலீட்டாளர்கள், டிமேட் கணக்கு வைத்துள்ளவர்கள் செபியின் உத்தரவின் படி நாமினேஷன் நியமிக்கப்பட வேண்டும் அல்லது தனிநபரின் விருப்பத்தின் படி நிமினேஷன்-ஐ நீக்கிக்கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்பதைச் செபியின் உத்தரவு.
ஒரு முதலீட்டுக்கு நாமினேஷன் நியமிப்பது என்பது கட்டாயம் என்பதைத் தாண்டி நீங்கள் செய்யுள்ள முதலீட்டை உங்கள் குடும்பத்திற்கு அல்லது நீங்கள் விருப்பப்படும் நபருக்கு எளிதாகச் சொத்துக்களை மாற்றும் ஒரு முறை தான் நாமினேஷன், இதைச் செய்யாவிடில் சொத்துகளையும், முதலீட்டையும் மாற்றுவது மிகவும் கடினமாகும்.
இது நீங்கள் இல்லாத தருணத்தில் உங்கள் குடும்பத்திற்கும் பெரும் இன்னல்களைக் கொடுக்கும், இதில் இருந்து விடுப்படவே செமி, ஆர்பிஐ அனைத்து நிதி முதலீட்டுக்கும், சேமிப்புக்கும் சரியான முறையில் நாமினேஷன் நியமிக்கக் கட்டாயப்படுத்தியுள்ளது.
நாமினேஷன் செய்யாவிட்டால் என்ன ஆகும் என்பது அடுத்த முக்கியமான கேள்வி, தற்போது செபி அமைப்பு டிமேட் கணக்குகள் மற்றும் மியூச்சவல் பண்ட் திட்டத்திற்கு நாமினேஷன் நியமிப்பதை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செய்ய உத்தரவிட்டு உள்ளது.

இதைச் செய்யாத பட்சத்தில் செபி உங்கள் மியூச்சவல் பண்ட் மற்றும் டிமேட் கணக்குகளை freeze செய்ய வாய்ப்பு உள்ளது, இதனால் பணத்தை வித்டிரா செய்ய முடியாது. உதாரணமாக மியூச்சவல் பண்ட் திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்கவோ அல்லது டிமேட் கணக்கைப் பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது.
இதனால் உங்கள் பணம் மொத்தமாக முடங்கிவிடும் அபாயம் இதில் உள்ளது. செபி அமைப்பு இதற்கான முதல் அறிவிப்பை ஜூன் 2022ல் அதன் பின்பு பல முறை இதற்கான காலகட்டத்தை நீட்டிப்புச் செய்து தற்போது டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாக உள்ளது. மறந்துவிடாதீர்கள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications