மொத்த விலை பணவீக்கம் விகிதமானது டிசம்பர் 2022ல் 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.95% ஆக சரிவினைக் கண்டுள்ளது. இது முந்தைய மாதத்தில் 5.85% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டில் 14.27% ஆக இருந்தது.
இந்த விகிதம் CNBC TV18 கணிப்பில் 5.57% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதத்தினை பொறுத்தவரையில் மொத்த விலை பணவீக்க விகிதம், நுகர்வோர் விலை பணவீக்கம், சில்லறை பணவீக்கம் விகிதம் என பலவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. அனைத்தும் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு சென்று கொண்டுள்ளதையே காட்டுகின்றது.
WPI முக்கிய பணவீக்கம்
தொடர்ந்து மூலதன செலவினங்கள் மற்றும் அதிக அடிப்படை விலைகள் மிதமாகிய நிலையில், டிசம்பர் மாத மொத்த விலை முக்கிய பணவீக்கம் 3.2% ஆகவும் இருந்தது. அதே நேரத்தில் 3.9%ல் இருந்து, 2.8% ஆக குறையும் என மதிப்பிட்டிருந்தனர். இது இறுதியில் எதிர்பார்த்ததை போலவே சந்தைக்கு சாதகமாக ஒரளவுக்கு இலக்கினை எட்டியுள்ளது எனலாம்.
அழுத்தம் குறைவு
எஸ்&பி உற்பத்தி பிஎம்ஐ ஆய்வில் உற்பத்தி துறையில் அழுத்தம் குறைந்துள்ள நிலையில், நிறுவனங்கள் செலவு குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில் தான் 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு மொத்த விலை பணவீக்கமானது குறைந்துள்ளது.
நவம்பர் மாத நிலவரம்
கடந்த நவம்பர் மாதத்திலேயே ஆச்சரியமளிக்கும் விதமாக முதல் முறையாக 19 மாதங்களுக்கு பிறகு ஒற்றை இலக்கிற்கு சரிவினைக் கண்டது. தொடர்ந்து பல்வேறு மூலதன பொருட்கள் விலையானது சரிவினைக் கண்டுள்ள நிலையில், காய்கறிகளின் விலையும் சரிவினைக் கண்டுள்ளது. இதே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் சரிவினைக் கண்டுள்ளது. எரிபொருள் அல்லாத பலவற்றின் விலையும் சரிவினைக் கண்டுள்ளது. தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே உணவு பணவீக்கமும் சரிவினை கண்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இலக்கு
இது தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு கீழாக சரிவினைக் கண்டு வருவது இன்னும் சாதகமான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் இது வரவிருக்கும் காலாண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு மத்திய வங்கியினை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications