சென்னை: இந்தியாவில் காணப்படும் பாரம்பரியமான சேமிப்பு வழக்கம் 2023ஆம் நிதியாண்டில் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2022ஆம் நிதியாண்டில் ரூ.17.1 டிரில்லியனாக இருந்த நிகர குடும்ப சேமிப்பு, 2023ஆம் நிதியாண்டில் ரூ.14.2 டிரில்லியனாகக் குறைந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியக் குடும்பங்கள் பொதுவாக பேங்க் முதல் சிறு உண்டியல் வரை அனைத்திலும் சேமித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் இத்தகைய சேமிப்பு தற்போது குறைந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.

நிகர குடும்ப சேமிப்பு என்றால் என்ன?: ஒரு குடும்பத்தின் கடன்செலவு போக அவர்களிடம் மீதமுள்ள பணம், முதலீடு போன்றவை நிகர குடும்ப சேமிப்பு என்று கூறப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு ரூ.17.1 டிரில்லியனாக இருந்த நிகர குடும்ப சேமிப்பு, கடந்த 2023ஆம் ஆண்டில் ரூ.14.2 டிரில்லியனாகக் குறைந்துள்ளது.
தற்போது மக்கள் தங்களுடைய செலவுகளுக்காக கடன் வாங்குவதால், சேமிப்பு குறைந்து வருகிறது. அதிக அளவில் கடன் வாங்கும்போது மக்கள் சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால், அதற்கு வட்டியும் முதலுமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாகவே சேமிப்பு குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
HDFC பேங்கின் பொருளாதார நிபுணர் சாக்ஷி குப்தா, இந்தியாவில் உள்ள குடும்பங்களில், செலவு அதிகமாக இருப்பதால், சேமிப்பு குறைந்திருக்கிறது. உதாரணமாக, வீட்டுவசதியைக் கூறலாம். 2023ஆம் நிதியாண்டில் வீட்டுக் கடனின் விகிதம் 7.1 சதவீதம். இது 2022ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் சற்று அதிகம் தான். கோவிட் காலத்திற்கு முந்தைய ஆண்டு, அதாவது 2019ஆம் நிதியாண்டில், 6.2 சதவீதமாக இருந்தது.
குடும்பங்களின் குறைந்த சேமிப்பு அதிக கடன் பொருளாதாரம் குறித்து நமக்கு உணர்த்துவது என்ன?: பணவீக்கம், குறைந்த அளவிலான வருமானம் போன்ற விஷயங்கள் குறித்து இவை எச்சரிக்கிறது. தற்போது மக்களின் நிலை மாறிவிட்டது. எதிர்காலத்திற்காக மட்டுமே சேமிக்க வேண்டும் என்றில்லாமல், நிகழ்காலத்தில் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக கடன் வாங்குகின்றனர். அதிலும் சிலர் வாகனக் கடன், வீட்டுக் கடன் என வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு வட்டியும் முதலுமாக சேர்த்து செலுத்தி வருகின்றனர்.
2023ஆம் நிதியாண்டில், குடும்பங்களின் நிகர சேமிப்பு 5.3 சதவீதமாக இருந்தது. இது சுமார் ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த விகிதமாகும். இதில் 2012ஆம் நிதியாண்டு முதல் 2022ஆம் நிதியாண்டு வரையிலான ஆண்டுகளில், கோவிட்-19 பாதிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டைத் தவிர்த்து, குடும்பங்களின் நிகர சேமிப்பு 7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை இருந்தது.
அதேபோல் 2023ஆம் நிதியாண்டில், குடும்பங்களின் மொத்த சேமிப்பு ரூ. 29.7 டிரில்லியனாக உள்ளது. ஆனால் மக்களின் நிதிப் பொறுப்புகளில் சுமார் 73 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேபோல் குடும்பங்கள் கடன் வாங்குவது குறித்து எந்தவித பயமும் கொள்ள தேவையில்லை. இது அவர்களுக்கு பிற்கால முதலீடாக அமையும். சான்றாக, ஒருவர் கடன் வாங்கி வீடு கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். பிற்காலத்தில், அவர் வாடகை பிரச்சினை இல்லாமல், அதனைக் கொண்டு வாழ முடியும். மக்கள் வாங்கும் கடன் துன்பத்திற்கானது மட்டுமல்ல. எதிர்காலத்தில் வரவிருக்கும் வேலை வாய்ப்பு, வருமானம் போன்ற நம்பிக்கையின் அடையாளமாக தான் இது உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications