டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற உடன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளின் இறக்குமதி மீது 25 சதவீத வரி விதித்துள்ளது மூலம் சர்வதேச பங்குச்சந்தை பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு இருக்கிறது. இதேவேளையில் டிரம்ப் சீனா மீது எவ்விதமான வரி விதிக்காதது குறித்து பலரும் பேசினாலும், இந்தொரு விஷயத்தைக் கவனிக்க மறந்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
அதிபராகப் பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் பேசும் போது, பிரிக்ஸ் நாடுகள் தங்களுடைய சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் பயன்பாட்டை குறைக்க ஏதாவது முயற்சி எடுத்தால் அந்த நாடுகள் மீது 25 சதவீத வரி இல்லை, 100 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் இருக்கும் வேளையில், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முயற்சிக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்ற தனது திட்டத்தை தேர்தல் பிரச்சாரத்தைத் தாண்டி டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்றிய பின்னர் வலியுறுத்தியுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகள் டி-டாலரைசேஷன் முயற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டாலே 100 சதவீத வரி விதிக்கப்படும். வரி விதித்தால் தானாக அவர்கள் தனது முயற்சியில் இருந்து பின்வாங்குவார்கள் என பேசியதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
டிரம்ப்-ன் மிரட்டும் தொனி பிரிக்ஸ் அரசுகளை கோபப்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. பிரிக்ஸ் கூட்டமைப்பு 2009ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிரிக்ஸ் பொருளாதாரக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினராக இந்தியா உள்ளது. மேலும் தான் கூறுவது மிரட்டலாக எடுத்துக்கொள்ள வேண்டாம், இது எங்களின் தெளிவான நிலைப்பாடு எனவும் டிரம்ப் பேசியுள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
ரஷ்யா, சீனா, இந்தியா இணைந்து கடந்த சில வருடங்களாக டாலரை நம்பியிருக்கக் கூடாது என்பதற்காக இரு நாடுகள் மத்தியில் செய்யப்படும் வர்த்தகத்திற்கு, தங்களுடைய சொந்த நாட்டு நாணயத்தைப் பயன்படுத்து முறையில் செயல்படுத்தி வருகிறது. இந்த முறைக்குப் பலரும் ஆதரவு தெரிவிக்கும் வேளையில் பல நாடுகள் இதில் இணைந்தது. குறிப்பாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகள் இதில் அதிகம் இணைந்தது.
தற்போது இதற்கு முட்டுக்கட்டை போடுவது மட்டும் அல்லாமல் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மிரட்டவும் செய்கிறது. இதனால் இந்த செயல்முறையிலிருந்து பின்வாங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டாலர் பயன்பாட்டைக் குறைத்தால் தான் நம்நாட்டின் பொருளாதாரம் உயரும் என்பதில் உறுதியாக இருக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப்-ன் அறிவிப்பு கட்டாயம் பெரும் பாதிப்பைக் கொடுக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் இனி ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து பத்திரமாகத் தான் வைக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications