சர்வதேச அளவில் அமெரிக்க டாலர் மதிப்பு பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் ஆசியாவில் பல நாடுகள் தங்களுடைய உள்நாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இறக்குமதிகளை அதிகம் நம்பியிருக்கும் நாடுகள் டாலர் மதிப்பில் ஏற்படும் பாதிப்புகளைக் களைய முடியும்.
சமீபத்தில் புட்பாலுக்குப் பெயர் போன நாடான அர்ஜெண்டினா-வில் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இவர் அந்நாட்டின் peso நாணயத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு டாலரை அந்நாட்டு நாணயமாக மாற்றுவதாகத் தேர்தலுக்கு முன்பு அறிவித்தார். இதைத் தான் dollarization என்றார்கள். தற்போது ஆசிய நாடுகள் செய்து வருவது dedollarization.

சீனாவும் சவூதி அரேபியாவும் சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான நாணய மாற்று ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட உள்ளது. சர்வதேச வர்த்தகத்திற்கு டாலரை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என முடிவு செய்த ஆசிய நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளில் சீனா - சவூதி அரேபியாவின் நாணய மாற்று ஒப்பந்தம் முக்கியமானதாக உள்ளது.
சீனா - சவூதி அரேபியா மத்தியிலான இந்த மூன்று வருட ஒப்பந்தத்தின் கீழ் அதிகபட்சமாக 50 பில்லியன் யுவான் அல்லது 26 பில்லியன் ரியால்களை மாற்றிக்கொள்ள முடியும். இரு நாடுகளின் வர்த்தக அளவை ஒப்பிடும் போது சிறியதாக இருந்தாலும்...
சவூதி அரேபியா உலகின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதியாளராக இருப்பதாலும், பெரும்பாலான உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் டாலரில் நடத்தப்படுவதாலும் இந்த ஒப்பந்தம் பெரியதாக இருக்கும். மேலும் இது ஆரம்பமாகவே பார்க்கப்படுகிறது.
சீன சுங்க வர்த்தகத் தரவுகளின்படி, சீனாவின் சிறந்த எண்ணெய் சப்ளையராக ரஷ்யா இருந்தாலும், சீனா 2022 இல் 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள சவுதி கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இது சீனாவுக்கு சவுதி அரேபியாவின் மொத்த ஏற்றுமதியில் தோராயமாக 83% ஆகும்.
இதேவேளையில் டாலர் ஆதிக்கத்தைக் குறைத்து டாலருக்கு மாற்று நாணயமாகச் சர்வதேச வர்த்தகத்தில் சீனாவின் யுவான் பயன்படுத்தும் நிலையை உருவாக்கும் சீனாவின் முயற்சியில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது தான் அமெரிக்காவுக்கு எதிராகச் சீனா செயல்படுத்தி வரும் மாஸ்டர் பிளான்.
டாலருக்கு மாற்று நாணயத்தைக் கொண்டு வர வேண்டும் என முதன் முதலில் திட்டமிட்ட ரஷ்யாவின் மொத்த சர்வதேச வர்த்தகத்தில் (சீனா இல்லாமல்) சுமார் 25 சதவீத வர்த்தகத்தை அந்நாட்டின் renminbi மூலம் செய்கிறது.


Click it and Unblock the Notifications