மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் என்றால், ஆசியாவில் ரஷ்யா - உக்ரைன் என எண்ணெய் வளமிக்க நாடுகளில் பெரும் போர் வெடித்து வருகிறது. அமெரிக்காவுக்கான எரிபொருள் லைப்லைன் ஆக இருக்கும் ரஷ்யாவின் 4வது பெரிய சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெய், எரிபொருள் வாங்கக் கூடாது என அமெரிக்க அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து தடை செய்யப்பட்ட நிலையில், டிரம்ப் அரசு அமெரிக்காவில் நிலவும் டீசல் பற்றாக்குறையைச் சரி செய்ய ரஷ்யாவிடம் உதவி பெற்று வருகிறது.

ரஷ்யா உடன் போர் துவங்கிய நாளில் இருந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிபொருள் வாங்குவது என்பது உக்ரைன் மீதான போருக்கு நிதியுதவி செய்வதற்குச் சமம் என உக்ரைன் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி வரும் வேளையில், அமெரிக்கா ரஷ்யாவிடம் டீசல் வாங்க ஒப்பந்தம் செய்த நாளில் இருந்து ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.
அந்த வகையில் இன்று Nizhny Novgorod பகுதியில் இருக்கும் ரஷ்யாவின் புகழ்பெற்ற லூக்ஆயில்-க்கு சொந்தமான Kstovo oil refinery மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை மேற்கொண்டது, இந்த தாக்குதல் மூலம் இந்த சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுக்க கரும் புகை சூழ்ந்தது.
இதுமட்டும் அல்லாமல் டிரோன் தாக்குதல் மூலம் ஏற்பட்ட விபத்து மூலம் மொத்த சுத்திகரிப்பு ஆலையிலும் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த Kstovo சுத்திகரிப்பு ஆலை என்பது ரஷ்யாவின் 4வது பெரிய சுத்திகரிப்பு ஆலையாகும், 2வது பெரிய பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையாக விளங்குகிறது.

மேலும் ரஷ்யாவின் மொத்த சுத்திகரிப்பு அளவில் சுமார் 6 சதவீதம் பங்கீட்டை இந்த ஒரு சுத்திகரிப்பு ஆலை கொண்டு உள்ளது வருடத்தில் சுமார் 17 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டு இந்த ஆலை.
இதைவிட முக்கியமாக ரஷ்யா ராணுவத்திற்குத் தேவையான பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவை பிரத்தியேகமாக இந்த ஆலையில் இருந்து தான் செல்கிறது என்பதால் திட்டமிட்டு உக்ரைன் ராணுவம் தனது எல்லையில் இருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் Kstovo ஆலை மீது, அந்த ஆலையின் முக்கியமான பகுதியான AVT-6 பிரிவை துல்லியமாக்க டார்கெட் செய்து தாக்கியுள்ளது.
கடந்த 3 நாட்களில் 3 சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது, Novokuybyshevsk, Ufa ஆகியவற்றைத் தொடர்ந்து இன்று Nizhny Novgorod பகுதியில் இருக்கும் Kstovo oil refinery மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications

