ஹெச்டிஎஃப்சி நிறுவனம் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் இணைந்த நாளில் இருந்து பல்வேறு மாற்றங்களும், புதிய முயற்சிகளும், சீர்திருத்தங்களும் நடந்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 2024ல் மட்டும் 12 சதவீதம் சரிந்துள்ளது.
இந்த நிலையில் ஹெச்டிஎஃப்சி வங்கி-யின் கிளை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தீபக் பாரேக் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். தீபக் பாரேக் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்த கேகி எம். மிஸ்ட்ரி-யை புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

தீபக் பாரேக் ராஜினாமா மற்றும் கேகி எம். மிஸ்ட்ரி தேர்வு செய்யப்பட்டு உள்ளதை பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் கேகி எம். மிஸ்ட்ரி நியமனத்திற்கு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் ஒப்புதல் அவசியம்.
ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி மற்றும் Abrdn கூட்டணியில் 2000ல் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் தனிநபர் மற்றும் குரூப் இன்சூரன்ஸ் சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர்களாக ஹெச்டிஎஃப்சி மற்றும் Standard Life ஆகிய நிறுவனங்கள் உள்ளது. உள்ளனர்.
கேகி எம். மிஸ்ட்ரி டிசம்பர் 2000 முதல் ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது, அவர் நிர்வாகம் அல்லாத இயக்குநராக (Non-Executive Director) உள்ளார்.
கேகி எம். மிஸ்ட்ரி தகுதிபெற்ற சார்டட் அக்கவுண்டன்ட் ஆவார். மேலும், இந்திய சார்டட் அக்கவுண்டன்ட் அமைப்பின் (Institute of Chartered Accountants of India) உறுப்பினரும் ஆவார். இதற்கு முன்னர், ஹெச்டிஎஃப்சி லிமிடெட்டின் துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
"ஹெச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் இணைந்ததைத் தொடர்ந்து, கேகி எம். மிஸ்ட்ரி ஹெச்டிஎஃப்சி-யில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது, ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக குழுவில் நிர்வாகம் அல்லாத இயக்குநராக உள்ளார். மேலும், பல முன்னணி நிறுவனங்களின் வாரியக் குழுக்களிலும் இயக்குநராக உள்ளார்," என்று பங்குச் சந்தை தகவல் பரிமாற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வி.கே.விஸ்வநாதன் மற்றும் பிரசாத் சந்திரன் ஆகியோர் தனிப்பட்ட இயக்குனர் பதவியில் விலகுவதாகவும், வெங்கட்ராமன் சீனிவாசன் புதிய தனிப்பட்ட இயக்குனராக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications