இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் உருவாகி இன்று பங்குச்சந்தையில் அசத்தி வரும் Zomato (ஆன்லைன் உணவு டெலிவரி), Blinkit (குவிக் காமர்ஸ்), Hyperpure (B2B உணவு பொருட்கள் டெலிவரி), மற்றும் District (டிக்கெட் புக்கிங்) போன்ற நிறுவனங்களின் தாய் நிறுவனமான இடர்னல் நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் நேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், இன்று தன்னிடம் இருக்கும் ரூ.1000 கோடி மதிப்பிலான பங்குகளை திருப்பி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இடர்னல் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் குரூப் சிஇஓ-வான தீபிந்தர் கோயல் தனது பதவியை விட்டு விலகுவதாக, நேற்று அறிவித்த நிலையில், இன்று ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ESOP பங்குகளை திருப்பி கொடுக்க முடிவு செய்து, தன்னிடம் இருந்த எடர்னல் பங்குகளில் சுமார் 3.3 கோடி பங்குகளை நிறுவனத்திற்கு திருப்பி அளித்துள்ளார்.

இது சிஇஓ பதவியை ராஜினாமா செய்வதால் தீபிந்தர் கோயல்-க்கு ஏற்படும் இழப்பு. தீபிந்தர் கோயல் தான் சிஇஓ பணியில் இருப்பதற்காக வழங்கப்பட்ட இந்த ESOP பங்குகளை, தற்போது ராஜினாமா செய்வதால் unvested பங்குகளை திருப்பி அளித்துள்ளார்.
தீபிந்தர் கோயல் டிசம்பர் காலாண்டு இறுதியில் நிறுவனத்தில் 3.83% பங்கு வைத்திருந்தார். ஃபோர்ப்ஸ் படி அவரது சொத்து மதிப்பு சுமார் 1.6 பில்லியன் டாலராகும். இந்த நிலையில் இன்று இடர்னல் பங்கு விலை காலை வரத்தகத்தில் இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் காரணமாக 7 சதவீதம் வரையில் உயர்ந்தது. ஆனால் அடுத்த சில நொடியில் சிஇஓ ராஜினாமா செய்தியின் தாக்கம் எதிரொலித்து டமாலென விழுந்து தற்போது 2.47 சதவீதம் சரிவுடன் 276 ரூபாய் விலையில் வர்த்தகமாகி வருகிறது.
தீபிந்தர் கோயல் சமீப காலமாக சில புதிய பிஸ்னஸ் ஐடியாக்கள் மூலம் ஈர்க்கப்பட்டு உள்ளதாகவும், இது ஆபத்து மிகுந்த ஒன்றாக இருக்கும் காரணத்தால் நிறுவனத்தை விட்டு வெளியில் இருந்து முயற்சி செய்ய முடிவு செய்துள்ள காரணத்தால் தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார்.
இதேவேளையில் CEO பதவியை விட்டு விலகிய தீபிந்தர் கோயல் இப்போது துணைத் தலைவராக உள்ளார். இதன் மூலம் தினசரி நிர்வாக பணிகளை பிளிங்கிட் CEO அல்பிந்தர் திந்த்சாவிடம் ஒப்படைத்துவிட்டு நிறுவனத்தின் முக்கியமான மூலோபாய முடிவுகளில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்துவார்.
ESOP என்பது ஒரு நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் முக்கியமான ஊழியர்களை தக்கவைத்து தொடர்ந்து வர்த்தகத்தை லாபகரமாகவும், வளர்ச்சி பாதையிலும் இயக்க வேண்டும் என்பதற்காக அளிக்க்பபடுகிறது. இதற்காக ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட அளவிலான பங்குகளை ESOPகாக ஒதிக்கி வைக்கும்.
தற்போது இடர்னல் நிறுவனத்தின் ESOP பிரிவில் 20 கோடிக்கும் மேற்பட்ட பங்குகள் உள்ளன. தீபிந்தர் கோயல் சமர்ப்பித்துள்ள 3.3 கோடி பங்குகள் மூலம் இந்நிறுவனத்தின் ESOP பிரிவு பங்குகள் 16% அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ளவும், புதிய அதிகாரிகளை ஈர்க்கவும், பங்குகள் வழங்குவது ஏதுவாக இருக்கும்.
இடர்னல் தற்போது ரூ.2.7 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்டுள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. பல லட்சகணக்கான குடும்பங்களுக்கு தினசரி சேவை செய்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications