மந்த நிலையிலும் வெற்றிதான்.. நிச்சயம் லாபம் பெறுவோம்.. சவால் விடும் சோமேட்டோ..!

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் லாபம் காணும் என்று அந்த நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான தீபைந்தார் கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வருட காலத்தில் இலாபகரமான நிறுவனமாக இருக்க வேண்டும். நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் செப்டம்பர் மாதங்களில் மூன்று மடங்கு வருவாய் 205 மில்லியன் டாலராக கண்டுள்ளது. (இந்திய மதிப்பில் சுமார் 1,458 கோடி ரூபாய்). இதே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 63 மில்லியன் டாலராக (448 கோடி ரூபாய்) இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மந்த நிலையிலும் வெற்றிதான்.. நிச்சயம் லாபம் பெறுவோம்.. சவால் விடும் சோமேட்டோ..!

இந்த நிறுவனம் வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தும் பிரிவுகளைப் பற்றி கேட்டபோது, அது அனைத்து பிரிவுகளிலும் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றும், அனைத்து பிரிவுகளிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் கோயல் கூறியுள்ளார். குறிப்பாக இந்த நிறுவனம் 600 மில்லியன் டாலர் (சுமார் 4,277 கோடி ரூபாய்) முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அனைவருக்கும் சிறந்த உணவு என்ற இலக்கினை அடைய இந்த நிறுவனம், அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது 24 நாடுகளில் சுமார் 10,000 நகரங்களில் உள்ளது. எனினும் கடந்த சில மாதங்களாக சோமேட்டோ தங்க திட்டத்தில் பல பிரச்சனைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏனெனில் உணவகங்களை நம்பித்தான் இந்த சேமேட்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களின் பொழப்பு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக சோமேட்டோவின் தங்கத் திட்டத்திற்கு பல உணவகங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த திட்டத்தினை கைவிடுமாறு கூறினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சோமேட்டோ நிறுவனம் இந்த திட்டத்தில் உணவகங்கள் எதிர்பார்த்த அளவு சலுகையை செயல்படுத்தவில்லை. இதனால் பெரும் நஷ்டத்தினையே கண்டன.

அதிலும் டெல்லி, என்.சி.ஆர், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல பெரு நகரங்களிலும் இந்த கோல்டு திட்டத்தில் இருந்து வெளியேறின. இதனால் சோமேட்டோ பெருத்த அடி வாங்கியது எனறே கூறலாம்.

இந்த நிலையில் இப்பிரச்சனையை தீர்க்கவும், தொடர்ந்து போராடி வரும் நிலையில், லாபத்தினை ஈட்ட இந்த நிறுவனம் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆக இந்த நிறுவனம் எதிர்பார்ப்பது போலவே லாபத்தினை பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+