சோமேட்டோ, பிளிங்கிட் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக இருக்கும் இடர்னல் நிறுவனத்தின் CEO ஆக இருந்த தீபேந்தர் கோயல் பிப்ரவரி 1, 2026 முதல் இப்பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார். இதை தொடர்ந்து தீபேந்தர் கோயல் முழு நேரமாக Temple நிறுவனத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவிதார்.
இந்த நிலையில் தீபேந்தர் கோயல் இன்று தனது டிவிட்டர் பதிவில் ஒரு புதிய ஸ்டார்ட்அப் 'டெம்பிள்' (Temple) நிறுவனத்தில் புதிதாக ஊழியர்களை நியமிக்கும் அறிவிப்பும், காலியாக உள்ள இடங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான 'அல்டிமேட் வியரபிள்' சாதனத்தை உருவாக்கி வருகிறது. இந்த புதிய கேட்ஜெட் உலகில் வேறு எந்த நிறுவனமும் அளவிடாத அளவுகளை மிக துல்லியமாக அளக்கும் திறன் கொண்டது என்று தீபேந்தர் கோயல் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார். இதை உருவாக்குவதற்கு "கிராஃப்ட் மற்றும் கேட்டகிரி" இரண்டிலும் ஆர்வமுள்ளவர்கள் தேவை என்று தீபேந்தர் கோயல் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் உருவாக்கும் இந்த சாதனத்தை நாங்களே பயன்படுத்தி, அது சரியாக இல்லை என்றாலோ, பிடிக்கவில்லை என்றாலோ உடனே மேம்படுத்தும் பணிகளை செய்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் TEMPLE நிறுவனத்தின் பணியில் சேரும் ஊழியர்களுக்கு புதிய மற்றும் தனிப்பட்ட நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
நிறுவனம் தற்போது பல்வேறு உயர்தர இன்ஜினியரிங் பதவிகளுக்கு ஆட்களை தேடி வருகிறது.
அனலாக் சிஸ்டம்ஸ் இன்ஞ்சினியர்கள்,
எலக்ட்ரானிக்ஸ் டிசைன் இன்ஞ்சினியர்கள்,
எம்பெடெட் சிஸ்டம்ஸ் இன்ஞ்சினியர்கள் (லோ-லெவல் HW பிரிங்-அப், எம்பெடெட் சிக்னல் & இமேஜ் பிராசஸிங், எம்பெடெட் AI),
சென்சார், ஆக்சுவேட்டர், பேட்டரி, ஆன்டென்னா, ஆப்டிக்ஸ் டிசைன் & வேலிடேஷன் இன்ஞ்சினியர்கள்,
CMF & அட்ஹெசிவ் மெட்டீரியல்ஸ் இன்ஞ்சினியர்கள்,
சென்சார் அல்காரிதம் இன்ஞ்சினியர்கள் (எஸ்டிமேஷன் தியரி, சென்சார் ஃப்யூஷன்),
டீப் லேர்னிங் இன்ஞ்சினியர்கள் (ஃபிசியாலஜிகல் மெட்ரிக்ஸ் ML மாடல் டெவலப்மென்ட்),
கம்ப்யூட்டேஷனல் நியூரோசையண்டிஸ்ட்கள்,
BCI இன்ஞ்சினியர்கள் (ரியல்-டைம் EEG/EMG அக்விசிஷன் & பிராசஸிங்),
நியூரல் டீகோடிங் ரிசர்ச்சர்கள் (பிரெயின் ஆக்டிவிட்டி டு செமான்டிக் மேப்பிங்),
கம்ப்யூட்டர் விஷன் இன்ஞ்சினியர்கள் (ஃபேஷியல் மைக்ரோஎக்ஸ்பிரெஷன், சப்வோகல் மஸ்கிள் டிடெக்ஷன்),
நியூரோஇமேஜிங் ML இன்ஞ்சினியர்கள் (மல்டிமோடல் சென்சார் ஃப்யூஷன்) ஆகிய பதவிகளுக்கு ஆட்களை தேடுகிறது. கடைசியாக, Figma-வில் டிசைனர் உதவியின்றி பணியாற்றக்கூடிய ப்ராடக்ட் மேனேஜர்களும் தேவை எனவும் தெரிவித்துள்ளாப் தீபேந்தர் கோயல்.
இந்த பணியில் சேர மிக முக்கியமான நிபந்தனை உள்ளதாகவும், தீபேந்தர் கோயல் தெரிவித்துள்ளார். இந்த கேட்ஜெட் உடலின் அதிகப்படியான பர்பாமென்ஸ் எல்லை தொடும் விளையாட்டு வீரர்களுக்காக உருவாக்கப்படுவதால், விண்ணப்பிப்பவர்கள் உடற்பயிற்சியை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கு உடல் கொழுப்பு 16% குறைவாகவும், பெண்களுக்கு 26% குறைவாகவும் இருக்க வேண்டும். இந்த அளவை அடையாதவர்களும் 3 மாதங்களுக்குள் அடைவதாக உறுதியளித்தால் விண்ணப்பிக்கலாம் - ஆனால் probation-ல் இருப்பர் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த பணியில் சேர மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் - மின்னஞ்சல் பொருள் வரியில் தங்கள் முக்கிய திறனை குறிப்பிட வேண்டும் ([email protected]) என்று தெரிவித்தார்.
மொத்தத்தில், டெம்பிள் ஸ்டார்ட்அப் உலகின் மிகவும் உயரிய துல்லிய வியரபிள் சாதனத்தை உருவாக்கி வருகிறது என தெரிகிறது. இதற்கு உடல் கொழுப்பு குறைவான, ஃபிட்னஸ் ஆர்வமுள்ள பொறியாளர்கள் மற்றும் நியூரோசையண்டிஸ்ட்கள் தேவை என்பதால் டெஸ்டிங் மிகவும் கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த பணியமர்த்தல் அறிவிப்பு டெக் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications