சீனாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான டீப்சீக் நிறுவனத்தின் AI மாடல்கள் மற்றும் செயலிகள் உலகளவில் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் இதன் சேவை குறித்த அச்சங்களும் அதிகரித்து வருகிறது. தரவு பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த சந்தேகங்கள் காரணமாக, இத்தாலி, தைவான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் டீப்சீக் தொழில்நுட்பத்தின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தாலி: இத்தாலிய தரவு பாதுகாப்பு அமைப்பு, தரவு பாதுகாப்பு மற்றும் பயனர் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகளை சுட்டிக்காட்டி டீப்சீக் AI செயலியை தடை செய்துள்ளது. நுகர்வோர் உரிமை குழுவால் முன்வைக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தைவான்: இத்தாலி நாட்டை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு கவலைகளை சுட்டிக்காட்டி, தைவான் அரசு, அரசு அலுவலகங்கள், பொது பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களில் டீப்சீக் AI பயன்பாட்டை தடை செய்துள்ளது. எல்லை தாண்டிய தரவு பரிமாற்றம் மற்றும் தகவல் கசிவு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே சீனா மற்றும் தைவான் நாட்டுக்கு மத்தியில் இருக்கும் பிரச்சனையில் இதுவும் சேர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியா: இதேபோல் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டி, ஆஸ்திரேலிய அரசு அரசு சாதனங்கள் மற்றும் அமைப்புகளில் டீப்சீக் AI பயன்பாட்டை தடை செய்துள்ளது.
இந்தியா: உலக நாடுகள் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் டீப்சீக் தொழில்நுட்பம் குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன. இந்திய நிதியமைச்சகம் தனது அரசு ஊழியர்களை ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI டூல்ஸ்களை அதிகாரப்பூர்வ வேலைகளுக்காக பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அரசு ரகசிய தகவல்களின் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டி இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் டீப்சீக் தொழில்நுட்பம் குறித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பாதுகாப்பு கவலைகளை சுட்டிக்காட்டி, அரசு வழங்கிய சாதனங்களில் டீப்சீக் AI க்கு பயன்படுத்துவதை தடை செய்துள்ளனர்.
அமெரிக்க கடற்படை தனது பணியாளர்கள் எந்த வகையிலும் டீப்சீக் AI ஐ பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. பாதுகாப்பு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு துறை பென்டகனில் டீப்சீக் தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூடாது என தடை செய்துள்ளது. இருப்பினும், Ask Sage என்ற அங்கீகரிக்கப்பட்ட தளம் மூலம் சீனாவில் உள்ள சர்வர்களில் தரவு சேமிக்கப்படாத வகையில், வரையறுக்கப்பட்ட பயன்பாடு கட்டமைப்பு வழங்கப்படுகிறது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (NASA) தரவு பாதுகாப்பு மற்றும் தவறான பயன்பாடு குறித்த அச்சங்கள் காரணமாக, அரசு வழங்கிய சாதனங்கள் மற்றும் நெட்வொர்க்குகளில் டீப்சீக் பயன்பாட்டை தடை செய்துள்ளது.
டெக்சாஸ் மாநில ஆளுநர் கிரெக் அபாட்டோ, டீப்சீக் மற்றும் பிற சீன நிறுவனங்கள் உருவாக்கிய AI மென்பொருட்களை மாநில அரசு வழங்கிய எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில் பயன்படுத்துவதை தடை செய்யும் அதிகார உத்தரவை பிறப்பித்துள்ளார்.
More From GoodReturns

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications