மைக்ரோசாஃப்ட் மற்றும் ஓபன்ஏஐ ஆகிய நிறுவனங்கள் சீனாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான டீப்சீக் மீது டேட்டா திருட்டு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. ஏஐ துறையில் எங்களை ஆடிச்சிக்க யாராலும் முடியாது, முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என சாம் ஆல்ட்மேன் இந்தியாவில் பேசிய வீடியோ டீப்சீக் வெற்றிக்கு பின்பு கடந்த 2 நாட்களாக டிரெண்டாகி வருகிறது.
இதேவேளையில் டீப்சீக் வெற்றி அமெரிக்கா பங்குச்சந்தையில் ஏஐ நிறுவனங்களை மட்டும் அல்லாமல் டெக் துறை, செமிகண்டக்டர், மின்சாரம், சர்வர் தயாரிப்பு என ஏஐ துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்கு மதிப்பும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் டீப்சீக் மீது மைக்ரோசாஃப்ட் மற்றும் ஓபன்ஏஐ இணைந்து தகவல் திருட்டு தொடர்பாக குற்றம்சாட்டி, விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. என்ன நடந்தது..?

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செக்யூரிட்டி பிரிவு ஆராய்ச்சியாளர்கள், டீப்சீக் நிறுவனத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சில நபர்கள், ஓபன்ஏஐ நிறுவனத்தின் API-ஐ பயன்படுத்தி ChatGPT சேவை தொடர்பான பெருமளவு தரவை டவுன்லோடு செய்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.
இந்த அங்கீகரிக்கப்படாத டேட்டா டவுன்லோடு ஓபன்ஏஐ-யின் சேவை விதிமுறைகளை மீறியிருக்கலாம் மற்றும் தரவு பயன்பாட்டில் முறைகேடு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுவதாகவும், இதுக்குறித்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிகிறது.
ஓபன்ஏஐ நிறுவனம் தனது ChatGPT சேவையை ஏபிஐ மூலம் பிற நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறகு. இதன் மூலம் சாப்ட்வேர் டெவலப்பர்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக ஓபன்ஏஐ தளத்தின் உதவியுடன் பல்வேறு ஏஐ சேவைகளை உருவாக்க முடியும். இதன் மூலம் ஓவ்வொருவரும் மில்லியன் கணக்கில் முதலீடு செய்தி ஏஐ மாடல் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.
பிற நிறுவனங்கள் ChatGPT சேவையை பயன்படுத்தவே இந்த ஏபிஐ-யை உருவாக்கப்பட்டது. ஆனால் இதை வைத்தே டீப்சீக் நிறுவனத்திற்கு தொடர்புடைய நபர்கள் ChatGPT ஏஐ தளத்தின் தரவுகளை திருடப்பட்டு இருக்கூடும், இதை வைத்துதான் டீப்சீக் உருவாக்கியிருக்ககூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் கண்டறிந்த அங்கீகரிக்கப்படாத தரவு பதிவிறக்கம், ஓபன்ஏஐ ஏபிஐ-யின் தவறான பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications